வட இந்தியாவிலிருந்து வரும் நடிகைகளை தமிழ்ப்படங்களில் நடிக்க வைப்பதற்குள் போதும் போதுமென்றாகி விடும். குறிப்பாக அவர்கள் பேசும் தமிழை காது கொண்டு கேட்க முடியாத அளவுக்கு கர்ணக் கொடூரமாக இருக்கும்.
புதுமுக நடிகைகள் என்றால் பரவாயில்லை, பல வருடங்களாக தமிழில் நடித்துக் கொண்டிருக்கும் பிரபல நடிகைகளே தமிழை கற்றுக்கொள்ள கொஞ்சமும் முன் வருவதில்லை. மாறாக வந்தோம், நாலு வார்த்தைகளுக்கு தமிழில் லிப் மூவ்மெண்ட் கொடுத்தோம் என்று போய் விடுகிறார்கள்.
அதுவும் தமிழ் சுத்தமாக தெரியாத நடிகைகளை புக் செய்யும் டைரக்டர்கள் அந்த நடிகைகளுக்கு வசனத்தை சொல்லிக் கொடுத்து காட்சிகளை புரிய வைப்பதற்குள் தாவு தீர்ந்து விடும். இந்த ஒரு மொழிச் சிக்கலில் தான் இப்போது காஜல் அகர்வால் வசமாக மாட்டிக்கொண்டு முழிக்கிறார்.
அவர் தமிழில் நடிக்க வந்து பல வருடங்கள் ஆகி விட்ட நிலையிலும் இன்னும் வணக்கம், நன்றி என்றளவில் மட்டும் தமிழை கற்றுக் கொண்டிருக்கிறார். இதனால் ஓரளவுக்காவது தமிழ் தெரியாத அவரை படங்களில் நடிக்க வைக்க டைரக்டர்கள் தயங்குகிறார்களாம்.
அதே சமயம், நயன்தாரா, அமலாபால் போன்ற நடிகைகளுக்கு தமிழ் நன்றாக தெரியும் என்பதால், அதிக சம்பளம் கொடுத்தாலும் படப்பிடிப்பு சீக்கிரமே முடிந்து விடும். இதனால் படப்பிடிப்பு செலவு மிச்சமாகிவிடும் என்று கணக்குப்பார்க்கிறார்களாம் தயாரிப்பாளர்கள்.
உதயநிதியின் நடிக்கும் நண்பேன்டா படத்தில் முதலில் கமிட்டாகியிருந்த காஜலை, பின்னர் கழட்டி விட்டதற்கு காரணம் இந்த மொழிப்பிரச்சனை தானாம்.
இதனால் அதிர்ச்சியடைந்திருக்கும் காஜல் எப்படியாவது அடிப்படைத் தமிழை கற்றுக்கொள்ள முடிவெடுத்து நல்ல தமிழ் டியூசன் வாத்தியாரை தேடி வருகிறார்.
0 comments:
Post a Comment