ஆண்ட்ரியா பொய் சொல்கிறார் என்றார் கமல்ஹாசன். தங்க மீன்கள் படத்தையடுத்து ராம் இயக்கும் படம் தரமணி, ஜே சதீஷ்குமார் தயாரிப்பு. வசந்த் ரவி, ஆண்ட்ரியா ஜோடி. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
இப்படத்தின் ஸ்கிரிப்ட்டை டைரக்டர் பாரதிராஜா வெளியிட்டார். தி சோல் ஆப் தரமணி என்று ஆண்ட்ரியா எழுதி இசை அமைத்து பாடிய பாடல் ஆல்பத்தை கமல் வெளியிட்டார். பிறகு அவர் பேசியதாவது: இங்கு என்னை பற்றி குறிப்பிட்ட இயக்குனர் ராம், நான் அடமானம் வைத்து படம் தயாரிப்பதாகவும், அதுதான் தனக்கு திரையுலகில் நீடித்திருக்கும் துணிவை தந்திருப்பதாகவும் கூறினார்.
நான் இங்கு வரும் போது எதையும் கொண்டு வரவில்லை. என்னை மட்டுமே மூலதனமாக வைத்தேன். இப்போது கிடைக்கும் கைத்தட்டல் உள்ளிட்ட மற்ற எல்லா வசதியுமே எனக்கு திரையுலகின் மூலம் கிடைத்த போனஸ். இப்படி தரப்பட்டவை எல்லாவற்றையுமே சினிமாவிலேயே போட வேண்டியது எனது கடமையாக கொண்டு செயல்படுகிறேன்.
எதுவும் மக்களிடம் போய் சேர வேண்டும். எப்படியாவது ஒரு படம் எடுக்கிறேன் என்று வீம்புக்கு எடுத்து அது மக்களுக்கு போய் சேராவிட்டால் அது வீண்தான். இங்கு ஆண்ட்ரியா பாடிய ஆங்கில பாடல் ஆல்பம் வெளியானது. இப்பாடலை தரமணி படத்தில் பயன்படுத்த முடியாது என்று இயக்குனர் கூறினார்.
தமிழ் படத்தில் ஆங்கில பாடல் இடம் பெறுவது என்பது எற்கனவே நடந்திருக்கிறது. மேடையில் பேசும் போது டைரக்டர், எடிட்டர், கேமராமேன் என்று பேசுகிறார்கள். இதெல்லாமே ஆங்கில வார்த்தைதான். தமிழ் மொழியானது எல்லா மொழியின் வார்த்தைகளையும் தனக்குள் வாங்கி கொண்டு தரம்மிக்கதாக உயர்ந்து நிற்கும் உறுதி வாய்ந்தது.
தான் பாடிய ஆங்கில பாடலை ராம்தான் கேட்டார் வேறு யாரும் கேட்டதில்லை என்று ஆண்ட்ரியா இங்கு சொன்னது பொய். விஸ்வரூபம் படத்தில் நடிக்கும் போது அவர் பாடிய இப்பாடலை நான் கேட்டிருக்கிறேன். இவ்வாறு கமல் கூறினார்.

0 comments:
Post a Comment