காமெடி நடிகருடன் நடிக்க 2 ஹீரோயின்கள் மறுத்தனர். காமெடி நடிகர்கள் ஹீரோக்களாக நடிக்கின்றனர். இவர்களுக்கு ஜோடியாக நடிக்க பெரிய ஹீரோயின்களை நடிக்க அழைத்தால் மறுத்துவிடுகிறார்கள்.
தற்போது வடிவேலு நடிக்கும் ஜெகஜால புஜபல தெனாலிராமன் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பார்வதி ஓமனகுட்டன், சினேகா உல்லால் போன்ற நடிகைகள் மறுத்தனர். அதுபோல் சந்தானம், விவேக் உள்ளிட்டோர் ஹீரோக்களாக நடித்த படங்களில் ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகள் சிலர் மறுத்துவிட்டனர்.
இந்த பாதிப்பு மல்லுவுட்டையும் விட்டுவைக்கவில்லை. 200க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்திருப்பர் இந்திரன். இவர் கதாநாயகனாக நடிக்கும் படத்தை சரத் இயக்குகிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க ஆஷா சரத்தை கேட்டபோது மறுத்துவிட்டார். அவருடன் ஜோடியாக நடித்தால் தனது இமேஜ் பாதிக்கும் என்று கூறிவிட்டார்.
அதேபோல் பீமா, கனவு மெய்ப்பட வேண்டும் போன்ற படங்களில் நடித்தவர் லட்சுமி கோபால்சாமி. அவரை அணுகியபோது நடிக்க சம்மதித்தார். ஜோடி கிடைத்துவிட்டது என்ற சந்தோஷத்தில் இயக்குனர் அலுவலகம் திரும்பியதும் லட்சுமியிடமிருந்து நடிக்க விரும்பவில்லை என்று தகவல் வந்தது. மல்லுவுட் பட ஹீரோ இந்திரஜித் படத்தில் நடிப்பதாக எண்ணி ஓ.கே. சொல்லிவிட்டேன்.
ஆனால் காமெடி நடிகர் இந்திரன் நாயகன் என்று தெரியவந்தது. அவருடன் ஜோடியாக நடிக்க விரும்பவில்லை என்று கூறினாராம். இதுபற்றி இயக்குனரிடம் கேட்டபோது,இரு நடிகைகளும் வேறு படங்களில் பிஸியாக இருப்பதால்தான் நடிக்கவில்லை என்று சாக்கு சொல்லி ஜகா வாங்கினார்.
0 comments:
Post a Comment