தேர்தல் நேரத்தில் மூன்றெழுத்து கட்சியை ஆதரித்து பிரசாரம் செய்து ஆட்டத்தை ஆடிய நகைச்சுவை நடிகர் தற்போது அம்மா கட்சி பக்கம் சாய விரும்புகிறாராம். காமெடியில் கலக்கி வந்த அவர் பிரசாரத்தின்போது சக நடிகரும், அரசியல் கட்சி ஒன்றின் தலைவருமான அந்த நடிகை சகட்டு மேனிக்கு திட்டி பேசினார்.
காமெடியரின் கெட்ட நேரம் அவர் தாக்கி பேசியவர் எதிர்கட்சி அந்தஸ்தில் போய் உட்கார்ந்தார். இதையடுத்து மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு சொந்த ஊருக்கு போனவர் தற்போதுதான் கோலிவுட் பக்கம் திரும்பி நடிக்க வந்துள்ளார்.
வந்த கையோடு தன்னுடைய படத்துக்கு எந்தவித பங்கமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அம்மா கட்சியில் சேர தூது விட்டிருக்கிறாராம். தோட்டத்தில் இருந்து பதில் வராதா என்ற ஏக்கத்தில் அந்த திசையை பார்த்துக் கொண்டே இருக்கிறாராம்.
0 comments:
Post a Comment