Sunday 16 February 2014

Leave a Comment

ஆதிக்கம் செய்யும் குழந்தைகளை கையாள்வதற்காக பெற்றோர்களுக்கான சில டிப்ஸ்...!



ஆதிக்கம் செய்யும் உடன்பிறப்புக்களை கையாளுவது இந்த காலத்தில் மிகவும் முக்கியமான செயலாகவும், கவனத்துடன் செய்ய வேண்டிய காரியமாகவும் உள்ளது. இப்படிப்பட்ட குழந்தைகள் வீட்டில் உருவாவதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் இவர்களின் ஆளுமைத்தனத்திலிருந்து வீட்டையும், மற்ற குழந்தைகளையும் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியமாகும்.

இப்படி ஆதிக்கம் செய்யும் குழந்தைகளை கையாளும் போது நாம் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். பெற்றோர்கள் சரியான சமயத்தில் அவர்களை திருத்தாவிட்டால், அது வீட்டையே பெரும் போர்க்களமாக மாற்றிவிடும்.

பெற்றவர்கள் தங்கள் குழந்தைகளை சரியாக வளர்க்க வேண்டியது அவர்களது கடமையாகும். அதுமட்டுமில்லாமல் எந்த வித பாகுபாடும் இல்லாமல் அவர்களை வளர்க்க வேண்டும். இப்படி இருப்பது ஒரு பக்கம் இருந்தாலும் ஆதிக்கம் செலுத்தும் அடங்காத உடன்பிறப்புக்களை எப்படி சமாளிப்பது என்பது பெரும் போராட்டமாகவே உள்ளது.

இப்படிப்பட்ட ஆளுமை செய்யும் குழந்தையை எப்படி வளர்ப்பது என்று தத்தளிக்கும் பெற்றோர்களுக்கு இதோ சில டிப்ஸ்!


பிரச்சனையை புரிந்து கொள்ளுங்கள்

இப்படிப்பட்ட குழந்தைகளை சரி செய்ய நினைப்பதற்கு முன் நாம் கண்டறிய வேண்டியது அவர்களின் நடத்தை பற்றிய விபரங்களையே. அவர்கள் எப்போது அத்தகைய குணங்களை வெளிப்படுத்துகின்றார்கள் அல்லது இதர சகோதர, ககோதரிகளை அடித்து அல்லது திட்டி புண்படுத்துகின்றார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.


விதிகளை அமைத்து அவர்களை அதை பின்பற்றச் செய்யுங்கள்

 உடன்பிறந்தவர்கள் எவ்வாறு நடந்து கொள்ளுவார்கள் என்பதை நாம் தெளிவாக அறிந்திருத்தல் அவசியம். அதை அவர்களிடம் வலியுறுத்தி எப்போதும் கடைபிடிக்கும் வகையில் செய்ய வேண்டும். இதை எப்போதும் கடைப்பிடிக்க நேர்ந்தால் ஆதிக்கம் செலுத்துவது என்பது காணாமல் போய் வீடும்.


பெற்றோர் என்ற பதவியை பயன்படுத்துங்கள்

 நீங்கள் பெற்றோர் என்ற இடத்தில் இருந்து உங்கள் பிள்ளையை திருத்த வேண்டும். சக உடன்பிறப்புகளிடம் இப்படி நடப்பது தவறு என்பதை உணர்த்தி அவர்களை கட்டுக்குள் கொண்டு வரப் பாருங்கள். அன்பாகவும், அடக்கு முறையையும் பயன்படுத்தி இதை செய்யலாம்.


மாற்றத்திற்காக காத்திருங்கள்

 குழந்தைகள் அவர்களின் ஆளுமை செய்யும் காரியங்களை சீக்கிரம் விட்டுக் கொடுப்பது கிடையாது. சிறிது காலத்திற்கு சில பிரச்சனைகள் வரக்கூடும். இதை எல்லாம் தாங்கிக் கொள்ளுங்கள். சிறிது காலத்திற்கு பின் நமக்கு நல்ல மாற்றம் தெரியவரும். மாற்றம் வரும் போது பயன் பெறுபவர்கள் நாமும், நமது குழந்தைகளும் தான்.


பாராட்டு தெரிவித்தல் 

ஆதிக்கம் செய்யும் குழந்தைகளின் சிறிய சிறிய நல்ல காரியங்களை கூட எப்போதும் ஊக்குவித்து பாராட்ட வேண்டியது நமது கடமையாகும். வாயின் வழியாக பாராட்டுவதை விட ஏதேனும் சிறிய பரிசாக இருந்தாலும் அவர்களிடம் கொடுத்து மகிழ்ச்சி படுத்த வேண்டும். இது ஒரு சிறந்த வழியாக அமையும். அவர்களை அன்புடன் பாராட்டும் போது அவர்களும் உங்கள் வழிக்கு வருவார்கள்.


இருவரும் சேர்ந்து முயற்சி செய்யுங்கள்

 தம்பதியரான நீங்கள் எப்போதும் இத்தகைய காரியங்களை எப்படி சாமாளிப்பது அல்லது குழந்தையை எப்படி திருத்துவது என்பதை முன்பாக கலந்தாய்ந்து இருவரும் ஒரு முடிவை பின்பற்ற வேண்டியது அவசியம். இல்லை என்றால் அவர்களை திருத்த முடியாமல் போகும்.


பொறுமையாக இருக்கவும்

 உடனுக்குடன் மாற்றத்தை எதிர்ப்பார்ப்பது உண்மையில் நடக்காத காரியமாகும். குழந்தைகள் இத்தகைய மாற்றங்களை உடனடியாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் பொறுமையாக உங்கள் திட்டத்தை கடைப்பிடிப்பதன் மூலம், எப்படி இத்தகைய பிள்ளைகளை சமாளிப்பது என்ற கேள்விக்கான விடைகளை நீங்களே தெரிந்து கொள்வீர்கள்.

0 comments:

Post a Comment