ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலை ஆனது தமிழ்நாடு முழுவதும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இலங்கையின் போர்க்குற்றம் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் கவனத்திற்கு வந்திருக்கிறது.
தமிழ் திரையுலகினர் தற்போது இலங்கை பிரச்சனை தொடர்பான படங்களை தயாரித்து வருகின்றனர்.
அந்த படங்களின் பட்டியலை நாம் பார்ப்போம்:
படம்: ’சிவப்பு’ – இயக்குனர் : சத்யசிவா
’சிவப்பு’ இலங்கை தமிழர்களின் விருப்பமாகிறது. சிவப்பு காதல், கோபம், வறுமை, கம்யூனிசம் போன்ற உணர்ச்சிகளை குறிக்கிறது. இந்த நிறம் ஒவ்வொரு தமிழர் சீற்றத்தை பிரதிபலிக்கிறது.
படம்: 'இனம்' – இயக்குனர் : சந்தோஷ் சிவன்
ஒளிப்பதிவாளர், இயக்குனர் சந்தோஷ் சிவன் தனது இனம் திரைப்படத்தில் 2009இல் இலங்கையில் நடைபெற்ற போரினால் சிதைக்கப்பட்ட மனித மனங்களின் உணர்வுகளை பற்றியதாகவே இருக்கும்.
படம்: 'இராவணன் தேசம்' – இயக்குனர் : அஜய்
இராவண தேசம் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தப்பி வரும் அகதிகள் படும் துயரங்களை வேதனையுடன் சொல்லும் படம்.
படம்: 'யாழ்' - இயக்குனர்: எம் ஆனந்த்
யாழ் படத்தில் இலங்கையில் இறுதிப்போரின்போது நடந்த சம்பவங்களையும், அப்போது அவர்களுக்குள் பரவிக் கிடந்த நட்பு, காதல், அன்றாட வாழ்வியல் நிகழ்வுகளை யதார்த்தம் மீறாமல் கூறியிருக்கிறார் இயக்குனர்.
படம்: 'நீர்ப்பறவை' – இயக்குனர் : சீனு ராமசாமி
துப்பாக்கி, இரத்தமில்லாமல் இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை கிராமத்தில் ஒரு இளம் மீனவரின் காதலோடு இணைத்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி.
0 comments:
Post a Comment