Wednesday, 26 February 2014

Leave a Comment

த்ரிஷாவின் வாழ்க்கையில் ஓர் புது வரவு...ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்...!



 த்ரிஷாவின் ஜிம்மில் புதுவரவாக என்ன உபகரணம் வந்துள்ளது என்று தெரியுமா? த்ரிஷா நடிக்க வந்து 10 ஆண்டுகளை தாண்டிவிட்டார்.

 ஆனால் அம்மணி நடிக்க வந்தது போன்றே இன்றும் ஸ்லிம்மாக உள்ளார். இடையே உடல் மெலிந்தாரே தவிர குண்டாகவில்லை.

அவர் தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் உள்ளவர்.

த்ரிஷா தனது வீட்டிலேயே ஒரு குட்டி ஜிம் அமைத்துள்ளார். அந்த ஜிம்மில் தான் அவர் தினமும் ஒர்க் அவுட் செய்கிறார்.


த்ரிஷா வீட்டு ஜிம்மில் புதிதாக குத்துச் சண்டை பயிற்சி எடுக்க பயன்படுத்தப்படும் பஞ்சிங் பேக் வைக்கப்பட்டுள்ளது. இதை அவரே ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

என் வீட்டு ஜிம்மில் புது வரவு. நன்றி அம்மா மற்றும் இ-பே. கிர்ர்ர்ர்ர்ர் வெளிப்படுத்த சிறந்த வழி என்று த்ரிஷா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

த்ரிஷாவுக்கு அவரது அம்மா சமைக்கும் பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். அம்மா பிரியாணி செய்தால் டயட்டை மறந்துவிட்டு மூக்குப் பிடிக்க சாப்பிட்டுவிடுவார்.

வாயைக் கட்டாமல் பிரியாணியை ஒரு கட்டு கட்டுவிட்டு ஜிம்மில் ஒர்க் அவுட் செய்துவிடுவார் போல. நல்ல ஒர்க் அவுட் தான்.

0 comments:

Post a Comment