ஒரு காலத்தில் காதல் இளவரசனாக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த்.
கடந்த இரண்டு வருடங்களாக சில தனிப்பட்ட காரணங்களுக்காக சினிமாவில் நடிப்பதைத் தவிர்த்து வந்தவர், மம்பட்டியான் என்ற படம் மூலம் சினிமாவில் களமிறங்கிவுள்ளார் பிரசாந்த்.
தற்போது ‘சாஹசம்’ படத்திற்காக உடல் எடையை குறைத்து, ஹேர் ஸ்டைலையும் மாற்றியுள்ளார்.
தியாகராஜன் தயாரிப்பில், புதிய இளம் இயக்குனர் ஒருவர் படத்தை இயக்க, முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இப்படத்தில் பணியாற்ற உள்ளனர்.
முதற்கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் துவங்கியுள்ளது, மேலும் மிகப் பெரிய பட்ஜெட்டில் இப்படத்தின் பாடல் காட்சிகள் ஆஸ்திரேலியா, இஸ்தான்பூல், குவைத் ஆகிய நாடுகளில் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
வரும் ஏப்ரல் 6ஆம் தேதி பிரசாந்தின் பிறந்தநாளுக்கு இப்படம் வெளியிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment