Wednesday, 26 February 2014

Leave a Comment

சினிமான்னா இவங்களுக்கு விளையாட்டாப்போச்சா...?



சினிமா திரையுலகில் விளையாட்டை மையமாக கொண்டு பல படங்கள் வெளிவரவுள்ளது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

2014இல் வரவிருக்கும் வல்லினம், ஐ, ஈட்டி, பூலோகம், ஜீவா ஆகிய படங்கள் விளையாட்டை மையமாக கொண்டு தமிழ்த் திரையுலகில் வெளிவரவுள்ளது. இத்திரைப்படங்கள் திரையுலகில் மிகவும் பேசப்படும் படங்களாக இருக்கிறது.
அந்த படங்களின் பட்டியலை பார்ப்போம்.

படம்: வல்லினம் – இயக்குனர் : அறிவழகன்

ஈரம் பட இயக்குனர் அறிவழகன் இப்படத்தை இயக்குகிறார். நடிகராக நகுலும், புதுமுக நடிகையாக மிருதுளாவும் நடிக்கிறார்கள். இத்திரைப்படம் கூடைப்பந்து விளையாட்டினை பின்னணியாகக் கொண்டு எடுத்த படமாகும்.

படம்: பூலோகம் – இயக்குனர் : என். கல்யாணகிருஷ்ணன்

ஜெயம் ரவி நடிப்பில் கல்யாண கிருஷ்ணன் இயக்கும் பூலோகம் படத்தில் நாயகனுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மதன் என்ற குத்துச்சண்டை வீரர் ஒருவரின் நிஜ வாழ்க்கையால் ஈர்க்கப்பட்டு உருவாகிவரும் இப்படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார்.

படம்: ஐ – இயக்குனர் : ஷங்கர்

தனித்துவத்தை தன்னில் கொண்டுள்ள விக்ரமும் பிரம்மாண்டத்தை கையில் வைத்திருக்கும் ஷங்கரும் இனைந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் விக்ரம் தடகள வீரராக நடித்துள்ளார்.

படம்: ஈட்டி – இயக்குனர் : ரவி அரசு

விளையாட்டின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் வேதனையை சொல்ல முயற்சிக்கும் படம் என்றாலும் காதலையும் சேர்த்து படம் இயக்கியுள்ளார் ரவி அரசு. இயக்குனர் வெற்றிமாறனும், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் இணைந்து தயாரிக்கும் படம் ஈட்டி. இப்படத்தில் அதர்வாவும், ஸ்ரீதிவ்யாவும் ஜோடியாக நடிக்கின்றனர்.

0 comments:

Post a Comment