நேற்று பிற்பகல் பிரசாத் லேப்பில் ஊடகத்தினருக்கான ”வல்லினம்” படத்தின் ப்ரத்யேக காட்சி திரையிடப்பட்டது.
அட என்னடா இது இந்த படம் இன்னும் ரிலீஸ் ஆக 5 நாட்கள் முன்னதாகவே பிரஸ் ஷோவா என ஒரு கேள்வியோடு கிளம்பினேன், அதுவும் ஈரம் என்ற அழகான ஒரு திகில் பொழுது போக்கு கொடுத்த இயக்குனரின் படம் அச்சோ என்று படத்தை ஆவலோடு பார்க்க ஆரம்பித்தேன்.
நான் எதிர்பார்த்தது போல் சற்றும் சோர்வு அடையாமல் திரைக்கதை ஜெட் வேகத்தில் சென்று இப்படி ஒரு உணர்வு பூர்வமான ,உன்னதமான படம் பார்த்து ரொம்ப நாளாச்சு என்ற உத்வேகம் எனக்குள் வந்தது. கண்டிப்பாக இந்த படத்தை பார்பவர்கள் அதை உணர்வார்கள்.
ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஈரம் என்ற திகில் வெற்றி படத்தை கொடுத்து ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த அறிவழகன் எண்ணத்தில் உருவான படம் ‘வல்லினம்’, இந்த படம் கிட்டத்தட்ட or ஆண்டு காலமாக வெளிவர முடியாமல் பெட்டிக்குள் முடங்கி கிடந்தது.
ஆள் ஆளாளுக்கு, இப்படி இருந்தா எப்படி, சீக்கிரம் படத்தை ரிலீஸ் பண்ணுங்க என்ற பஞ்சாயத்தில் வர டயலாக் மாதிரி ரவிச்சந்திரன் காதில் ஊதி தள்ள இப்போது வல்லினம் படத்துக்கு விமோச்சனம் கிடைத்துள்ளது .
ஏன் இவ்ளோ தாமதம் என்று மீடியாக்களிடம் இருந்து கேள்வி வந்துவிடுமோ என்று திரு திருவென முழித்தனர் படகுழு
படத்தின் ஒரு முன்னோட்டத்தை பார்ப்போம்.
பொதுவாக மக்களிடைய அதிக பொழுதுபோக்கு என்று பார்த்தால் சினிமாவை விட விளையாட்டுகள் தான். அதில் அங்காங்கே சில பேர் தங்களுடைய விளையாட்டுகளை உயிராகவும் மற்றும் எதிர்கால வாழ்க்கையாகவும் தங்களை வழி வகுத்து கொள்கிறார்கள்.
ஆனால் இன்றைய சூழலில் விளையாட்டு எவ்வாறு வியாபாரம் ஆகிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ள படம் வல்லினம்.படத்தோடு மைய புள்ளியாக இதுவரை தமிழ்நாட்டுக்கு அவ்ளோ பரிச்சியம் இல்லாத பாஸ்கட் பால் தீம்மை கையாண்டு இருக்கிறார் அறிவழகன்.
படத்தில் நகுல், மிருதுளா, ஜெகன், சித்தார்த் , அம்சது கான் நடிக்க மற்றும் முக்கியமான கதாபாத்திரத்தில் அதுல்குல்கர்னி நடித்து உள்ளார்.
இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என்பதில் சந்தேகமில்லை. படத்தின் ஒளிப்பதிவும், திரைக்கதை மற்றும் பின்னணி இசை பெரிய பலம் என்று தான் சொல்ல வேண்டும்.
வரும் வெள்ளிக்கிழமை இப்படம் தமிழகம் முழவதும் ரிலீஸ் ஆகி ரசிகர்களை குஷிப்படுத்த வருகிறது.
0 comments:
Post a Comment