குண்டு குண்டுன்னு இருந்தாதான் தமிழ் ரசிகர்களுக்குப் பிடிக்கும்னு சொன்னாங்க.. அதனால ஸ்லிம்மா இருந்த நான் குண்டானேன், என்றார் சஞ்சனா சிங். 'ரேணிகுண்டா' படத்தில் அறிமுகமானவர் சஞ்சனா சிங்.
தொடர்ந்து கோ, ரகளபுரம் உள்பட பல படங்களில் கவர்ச்சி வேடம், ஐட்டம் டான்ஸ் என நடித்து வந்தார். கடந்த 23-ம் தேதி தன் பிறந்த நாளை பத்திரிகையாளர்களுடன் கொண்டாடினார் சஞ்சனா சிங்.
அப்படிக் கொண்டாடியதில் தப்பில்லை. அதற்கு அவர் சொன்ன காரணம் நெளிய வைத்தது. 'வழக்கமா நான் என் பிறந்த நாளை அநாதை ஆசிரமத்தில் கொண்டாடுவானேன். இந்த முறை உங்களோடு கொண்டாடுகிறேன்,' என்று கூறி நெளிய வைத்தார்!
நமீதாவை விட கொஞ்சம் பெட்டராகவே தமிழ் பேசும் சஞ்சனா தொடர்ந்து பேசியதிலிருந்து... "ரேணிகுண்டாவில் அறிமுகமானேன். பன்னீர் சார் கொடுத்த அந்த வாய்ப்பு மறக்கமுடியாதது. நடிக்க வந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. சுமார் 20 படங்களில் நடித்திருக்கிறேன்.
கதாநாயகியாக நடிக்கத்தான் வந்தேன். ஆனால் அப்படிப்பட்ட வாய்ப்பு கிடைக்கும்வரை நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. சின்னச்சின்ன வேடங்களில் நடித்தேன். அதன் மூலம் கிடைத்த அனுபவங்களை மறக்க முடியாது.
நான் சினிமாவில் நடிக்கிற எண்ணத்தில் இங்கு சென்னை வந்தபோது படாதபாடு பட்டேன். அப்ப ஸ்லிம்மா ஒல்லியா இருந்தேன். எனக்குத் தமிழும் தெரியாது. இந்த இரண்டு பிரச்சினையையும் முதலில் எடுத்துக் கொண்டேன். இங்கு ஒல்லியா இருந்தால் பிடிக்காது. ரசிக்க மாட்டார்கள். குண்டு குண்டுன்னு இருக்கவேண்டும். அப்போதான் ரசிப்பார்கள்... எனவே முதலில் கொஞ்சம் வெயிட் போட்டேன்.
தமிழ் கற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருந்தேன் 'ரேணிகுண்டா'வில் நடித்த போதே டைரக்டரிடம் எனக்கான வசனத்தை முதல்நாள் கொடுத்து விடும்படி கேட்பேன். வாங்கி வந்து மறுநாளே தமிழில் பேசி நடித்துக்காட்டி விடுவேன்.
அவரே ஆச்சரியப்பட்டு பாராட்டுவார். அவர் நம்பிக்கையும் ஊக்கமும் கொடுத்ததால்தான் எனக்கு உங்கள் முன் நிற்கும் இந்த இடம் கிடைத்துள்ளது. அதன் பிறகு என் மேனேஜர் மூலம் தமிழ்ப் பேச கத்துக்கிட்டேன்.
தமிழ் மொழி பற்றி நிறைய கேள்விப் பட்டுஇருக்கிறேன். அதுமாதிரி ஆடியோ நிகழ்ச்சிகளுக்கு பேச வேண்டியதை முன்பே தயார் செய்து மனப்பாடம் செய்து பேசி வந்தேன். இப்போது சொந்தமாக திக்கித் திணறியாவது பேசி விடுவேன்.
இப்போது தமிழ் மீது எனக்கு ஆர்வம் வந்து விட்டது. தமிழ் க்யூட்டான லாங்வேஜ்... அழகான மொழி. நன்றாக தமிழ் கற்றுக் கொண்டு சரளமாக அழகாகப் பேச வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. நிச்சயம் பேசுவேன்.
இப்போ ஜெயம் ரவியுடன் நடிக்கும் 'தனியொருவன்' படத்தில் எனக்கு நல்ல கேரக்டர். 'விஞ்ஞானி' ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம். மீரா ஜாஸ்மின் கதாநாயகி நான் 2 வது கதாநாயகி. இந்தப் படத்துக்காக சமீபத்தில் பாங்காக் போய் வந்தேன்.
அண்டர்வாட்டர் காட்சியில் நடித்தேன். ஹெலி காப்டர் காட்சி எல்லாம் எடுத்தார்கள். பாடல் காட்சியும் எனக்கு உண்டு. விவேக் சாருடன் நடித்தது மறக்க முடியாது. அவர் நிறைய சொல்லிக் கொடுத்தார்.
இப்பவும் குத்துப் பாடலுக்கு ஆட கூப்பிடறாங்க. ஆனால் எனக்கு அது பிடிக்கவில்லை. கதாநாயகியாக நடிக்கவே ஆசை. குறைந்தபட்சம் 2 வது கதாநாயகி வேடமாவது வேண்டும். ஒரு பத்துப் பதினஞ்சி படமாவது ஹீரோயினா நடிச்ச பிறகு வேணும்னா குத்துப் பாட்டுக்கு ஆடறேன்," என்றார்.
0 comments:
Post a Comment