Saturday, 8 February 2014

Leave a Comment

சிம்புவுக்காக தாறுமாறாக பாடலை பாடிய டி.ராஜேந்தர்...!



சிம்பு நடிப்பில் வெளிவர தாமதமாகிக் கிடப்பில் கிடக்கும் படங்கள் இரண்டு.

புதுமுக இயக்குனர் விஜயசந்தர் இயக்கும் ‘வாலு’ மற்றும் இன்னொரு புதுமுக இயக்குனர் நெல்சன் இயக்கும் ‘வேட்டை மன்னன்’ ஆகிய படங்கள். இவ்விரண்டு படங்களையும் நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பாக எஸ்.எஸ்.சக்ரவர்த்தி தான் தயாரிக்கிறார். அதேசமயம் இந்தப் இரண்டு படங்களிலும் சிம்புவுக்கு ஜோடி அவரது ஃபேவரிட் கேர்ள் ஹன்சிகா.

தற்போது இதில் ‘வாலு’ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டதை எட்டியுள்ளது. இந்தப் படத்தில் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் பாடல் ஒன்றை தமன் இசையில் பாடியிருக்கிறார். ‘தாறுமாறு…’ என அந்தப் பாடலின் வரிகள் ஆரம்பமாகிறது. ஏற்கெனவே, டி.ராஜேந்தர் தமன் இசையில் சிம்பு நடித்த ‘ஒஸ்தி’ படத்தில் இடம் பெற்ற ‘கலாசலா…’ என்ற பாடலை பாடியிருக்கிறார். அந்த வரிசையில் தமன் இசையில் மீண்டும் ஒரு பாடலை பாடியிருக்கிறார் டி.ராஜேந்தர்.

‘வாலு’ படத்தின் இசைவெளியீடு பிப்ரவரி 14, 2014 அன்று காதலர் தினத்தன்று நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

0 comments:

Post a Comment