Saturday, 8 February 2014

Leave a Comment

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உலகநாயகன்...!



’விஸ்வரூபம் 2’ படத்தினைத் தொடர்ந்து ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் ‘உத்தம வில்லன்’ படத்தில் நடிக்கவிருக்கிறார் கமல்.

‘சதிலீவாவதி’, ’பஞ்ச தந்திரம்’, ‘மும்பை எக்ஸ்பிரஸ்’, ‘மன்மதன் அம்பு’ போன்ற படங்களில் கமலுடன் இணைந்து நடித்த, கமலுக்கு நெருங்கிய நண்பரான ரமேஷ் அரவிந்த் இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார். கிரேஸி மோகன் வசனம் எழுதுகிறார்.

உத்தம வில்லன் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாக முதலில் கூறப்பட்டது. இந்நிலையில் திடீர் திருப்பமாக யுவனுக்குப் பதில் ‌ஜிப்ரானை இறக்கியிருக்கிறார் கமல். உத்தம வில்லனை திருப்பதி பிரதர்ஸ் தயா‌ரிக்கிறது. அவர்களின் அஞ்சான் படத்துக்கு யுவன்தான் இசை. எனவே, அவரே உத்தம வில்லன் படத்துத்துக்கும் இசை என்றார்கள்.

ஆனால் கமலின் முடிவு வேறு மாதி‌ரி இருந்திருக்கிறது. தனது விஸ்வரூபம் 2 படத்துக்கு இசையமைத்த ‌ஜிப்ரானையே உத்தம வில்லன் படத்துக்கும் கமிட் செய்திருக்கிறார். ‘உத்தம வில்லன்’ படத்தில் தன்னை இசையமைப்பாளராக பணியமர்த்தியதற்காக சில மாதங்களுக்கு முன் யுவன் ஷங்கர் ராஜா கமல்ஹாசனை சென்று வாழ்த்து பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment