Saturday, 8 February 2014

Leave a Comment

``சாகசம்`` படத்திற்காக சாகசம் செய்த பிரசாந்த்..!

சாகசம் படத்திற்காக 18 கிலோ எடையை குறைத்த பிரசாந்த்..!


சாகசம் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு வரும் 19ம் துவங்கவிருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் நடிக்கும் படம் ‘சாகசம்’. இந்தப் படத்தினை புதுமுக இயக்குனர் அருண் ராஜ் வர்மா இயக்குகிறார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். கலை பொறுப்பை மிலன் ஃபெர்னாண்டஸ் ஏற்றிருக்கிறார். படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கிறார்.

‘பொன்னர் சங்கர்’, ‘மம்பட்டியான்’ படங்களில் கட்டுமஸ்தான முறுக்கு உடம்புடன் தோன்றி நடித்த பிரசாந்த், ‘சாகசம்’ படத்திற்காக 18 கிலோ எடையை குறைத்துள்ளார். தற்போது ‘ட்ரிம்’ ஆன உடம்போடு சுறு சுறுப்பான ஆசாமியாக காட்சியளிக்கும் பிரசாந்த் இந்தப் படத்தில் மாறுபட்ட ஒரு கேரக்டரில் நடிக்கிறாராம்.

இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், வரும் 19ஆம் தேதியில் இருந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆரம்பிக்க இருக்கிறது. பிரசாந்த் நடிக்கும் படங்கள் என்றால் அதில் நடிக்கும் ஹீரோயின்கள் பெரும்பாலும் பாப்புலரானவர்களாக இருப்பார்கள்! அதுமாதிரி இந்தப் படத்திலும் பிரசாந்துக்கு ஜோடியாக நடிக்க பாப்புலரான ஒரு ஹீரோயினை தேடி வருகிறார் தியாகராஜன்.

0 comments:

Post a Comment