Saturday, 8 February 2014

Leave a Comment

‘ஆஹா கல்யாணம்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்..!



‘நான் ஈ’ வெற்றியை தொடர்ந்து, நானி நடிப்பில் தமிழில் வெளியாகவிருக்கும் படம் ‘ஆஹா கல்யாணம்’.

இந்தப் படத்தின் மூலம் கோகுல் கிருஷ்ணா இயக்குனராக அறிமுகமாகிறார். இவர், விஷ்ணுவர்தனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். படத்திற்கு தரண் இசையமைக்கிறார். திருமண நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை மையப்படுத்தி இதன் கதை பின்னப்பட்டுள்ளது.

இந்தியில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் ஃப்லிம்ஸ் நிறுவனம் தயாரித்த ‘பாண்ட் பாஜா பாரத்’ படத்தின் ரீமேக் தான் இது. சமீபத்தில் இந்தப்படம் தணிக்கைக் குழுவிற்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். இம்மாதம் 21 ஆம் தேதி இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment