Sunday 23 February 2014

Leave a Comment

தொழில்நுட்ப கோளாறு: கொஞ்ச நேரம் புஸ்ஸாப்போன வாட்ஸ்ஆப்..!



லாஸ் ஏஞ்சல்ஸ்: ஃபேஸ்புக் ரூ.99, 584 கோடி கொடுத்து வாங்கும் வாட்ஸ்ஆப் சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று சிறுது நேரம் பாதிக்கப்பட்டது.

ஃபேஸ்புக் நிறுவனம் ரூ.99, 584 கோடி கொடுத்து வாங்கும் ஆன்லைன் மெசேஜ் சேவையான வாட்ஸ்ஆப் நேற்று மதியம் 2.30 மணி அளவில் வேலை செய்யவில்லை. இது குறித்து விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட இமெயில்களுக்கு வாட்ஸ்ஆப் மற்றும் ஃபேஸ்புக் விளக்கம் அளிக்கவில்லை.

சிறுது நேரத்தில் வாட்ஸ்ஆப் மீண்டும் வேலை செய்வதாக ட்விட்டரில் பலர் தெரிவித்தனர். மெசேஜ் சேவை மீண்டும் வேலை செய்வதாகவும், தடங்கலுக்கு வருந்துகிறோம் என்றும் வாட்ஸ்ஆப் ட்விட்டரில் தெரிவித்தது.

வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப நிறுவன சேவையில் அவ்வப்போது பிரச்சனைகள் ஏற்படுவது சகஜம். கடந்த மே மாதம் முதல் மாதத்தில் ஒரு முறையாது இது போன்று பிரச்சனை ஏற்படுவதாக வாட்ஸ்ஆப் ட்வீட் செய்து வருகிறது.

கடந்த 2009ம் ஆண்டு துவங்கப்பட்ட வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் சேவையை 450 மில்லியன் பேர் பயன்படுத்துகிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 1 பில்லியன் ஆகும் என்று ஃபேஸ்புக் நிறுவன சிஇஓ மார்க் ஜக்கர்பர்க் நம்புகிறார்.

0 comments:

Post a Comment