விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்த ஆரம்பம் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. முதலீடு செய்த பணத்தைவிட பலமடங்கு வசூலித்துவிட்ட ஆரம்பம் திரைப்படத்திற்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலிருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அஜித்தின் பெரும்பாலான படங்களை தெலுங்கில் டப்பிங் செய்து ஆந்திராவில் வெளியிட்டு ஏமாற்றம் மட்டுமே அடைந்த தகவல்கள் தெரிந்திருந்தும் ‘ஆரம்பம்’ திரைப்படத்தை டப்பிங் செய்து தைரியமாக ஆந்திராவின் பெரும்பாலான திரையரங்குகளில் ரிலீஸ் செய்கின்றார் ஆரம்பம் திரைப்பட தயாரிப்பாளர்.
தமிழில் ஆரம்பம் வெற்றிபெரும் என்பதற்கு அஜித் மீது வைத்திருந்த நம்பிக்கை ஒரு காரணம் என்றால், தெலுங்கில் வெளியிடுவதற்கு ராணா, நயன்தாரா, டாப்ஸி ஆகியவர்களின் மீது இருக்கும் நம்பிக்கை தான் காரணமாம்.
இந்த மூன்று பேரும் தெலுங்கில் நல்ல மார்கெட் உள்ளவர்கள் என்பதால் ஆரம்பம் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறதாம் தயாரிப்பாளர் டீம். தெலுங்கில் ஆரம்பம் திரைப்படம் ‘ஆட்டம் ஆரம்பம்’ என்ற பெயரில் ரிலீஸாகிறது.

0 comments:
Post a Comment