Wednesday, 12 February 2014

Leave a Comment

கௌதம் மேனனுடன் இணையும் ஏ.ஆர்.ரஹ்மான்..?



கௌதம் மேனனின் இயக்கத்திலும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையிலும், சிம்புவின் மாறுபட்ட நடிப்பிலும் வெளிவந்து ரசிகர்களை கிரங்கடித்த திரைப்படம் விண்ணைத் தாண்டி வருவாயா. கௌதம் மேனனின் சிறந்த படங்களில் எப்போதூம் இந்த திரைப்படத்திற்குத்தான் முதல் இடம் என்று ரசிகர்கள் என்றோ எழுதிவைத்துவிட்டார்கள்.

கௌதம் மேனனின் நடவடிக்கைகளோ ரசிகர்களின் எண்ணத்தை மாற்றிவிடும் போக்கில் தொடர்ந்துவருகின்றன. அஜித்தின் கால்ஷீட் பிப்ரவரியில் கிடைத்திருப்பதால் அதற்குட்பட்ட 3 மாதத்திற்குள் ஏற்கனவே தயாராக வைத்திருந்த ஒரு கதையை படமாக்கிவிடவேண்டும் என்ற முயற்சியில் முழுவதும் ஈடுபட்டுள்ளார் கௌதம் மேனன்.

சிம்புவை ஹீரோவாக அறிவித்ததுமே இந்த திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் அதிகமாகிவிட, தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் இத்திரைப்படத்தின் இசையமைப்பாளராக பணியாற்றுவதாக வெளியாகியுள்ள செய்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தைப் போன்று இன்னொரு படம் நமக்கு கிடைக்கப்போகிறது என்ற மகிழ்ச்சியில் இருக்கின்றனர் ரசிகர்கள்.


0 comments:

Post a Comment