Wednesday, 12 February 2014

Leave a Comment

மிஷ்கினிடம் பணம் வாங்காத இளையராஜா..!



தங்கள் படங்களில் ‘இசையமைப்பாளர்’ இளையராஜா என்று டைட்டில் கார்டில் அவர் பெயர் போடுவதையே பலர் பெருமையாக நினைக்கிறார்கள். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படத்தில் மிஷ்கின் ‘முன்னணி இசை’ இளையராஜா என்று டைட்டில் கார்டில் குறிப்பிட்டு இளையராஜாவை பெருமைப்படுத்தினார்.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படத்தில் பாடல்களே இல்லை என்று அறிந்ததும் அதிர்ந்த ரசிகர்கள், பாடல்களே இல்லாத ஒரு திரைப்படத்தில் இளையராஜா இசையமைப்பாளராக பணியாற்றுகிறாரா? என்று குழப்பத்தில் ஆழ்ந்தனர். ரசிகர்களின் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் போக்கும் விதத்தில் வெளிவந்த ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படத்தில் இளையராஜா தனக்கென ஒரு இசைராஜாங்கம் அமைத்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

மிஷ்கினின் படமும், இளையராஜாவின் இசையும் ரத்தமும் சதையையும் போன்றது, ஒன்று இல்லாமல் மற்றொன்று இல்லை என்ற அளவிற்கு ரசிகர்களிடம் பெயர்பெற்ற ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படத்திற்கு இளையராஜா ஒரு பைசா பணமும் வாங்காமல் பணியாற்றியிருக்கிறார் என்பது ரசிகர்களை மேலும் நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.

படம் முழுக்க முழுக்க இளையராஜாவை ராஜநடை போட வாய்ப்பு கொடுத்த மிஷ்கினிடம் இளையராஜா பணம் வாங்காதது பெரிய விஷயம் இல்லை என்கிறது தமிழ்த்திரையுலகம். டைட்டில் கார்டில் கொட்டை எழுத்தில் இளையராஜாவின் பெயரை போட்டுவிட்டு அதற்கு கீழே மிஷ்கின் தனது பெயரை சிறியதாய் குறிப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment