Wednesday, 12 February 2014

Leave a Comment

’லிப்’லாக் கேன்சல்..! கடுப்பில் கஞ்சா கருப்பு...!



வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், யாரடி நீ மோகினி திரைப்படங்களில் குத்தாட்டம் போட்டு ரசிகர்களை மகிழ்வித்த நடிகை ரகசியாவை தமிழ் சினிமா ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்கமாட்டார்கள். ஆனால் தமிழ்த் திரையுலகம் அவரை மறந்தேவிட்டது.

கருணாஸ் ஹீரோவாக நடித்த சந்தாமாமா, ரகளபுரம் ஆகிய இரண்டு படங்களிலும் குத்தாட்டம் ஆடிக்கொடுத்துவிட்டு, திரையுலகில் நம் வாழ்க்கை இப்படியே முடிந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருந்தபோது தான், கேரக்டர் ரோலுக்கான வாய்ப்பு வந்திருக்கிறது ரகசியாவுக்கு.

கதையை கேட்டு ஓகே செய்த பிறகுதான் வேல்முருகன் போர்வெல் என்ற அந்த படத்தின் ஹீரோ கஞ்சா கருப்பு என்பது தெரிந்திருக்கிறது ரகசியாவுக்கு. ’ஹீரோ யாராக இருந்தாலும் நமக்கு தேவை திறமையை நிரூபிக்க ஒரு வாய்ப்பு’ என்று நடித்துவந்த ரகசியாவிடம் ஒருநாள் ’படத்தோட முக்கியமான காட்சி இது. நீங்களும் கஞ்சா கருப்புவும் லிப்லாக் முத்தக்காட்சியில நடிக்கனும்’ என்று  திடீரென ஒரு அதிர்வேட்டை போட்டிருக்கிறார் இயக்குனர் கோபி.

இதனால் அதிர்ச்சியடைந்த ரகசியா என்னால் அதெல்லாம் முடியாது என ஷூட்டிங் ஸ்பாட்டைவிட்டு ஓடியே போய்விட்டாராம். அதன்பிறகு அப்படி இப்படி பேசி சமரசம் பேசி நெத்தியில் லைட்டாக ’பசக்’ என முத்தம் கொடுக்க சம்மதம் வாங்கிவிட்டாராம் கோபி. சில நாட்களாகவே முத்தக்காட்சியில் கஞ்சா கருப்பு நடிப்பதாக தகவல் பரவி வந்ததால், அந்தக் காட்சியைப் பார்க்க ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றாத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர்

0 comments:

Post a Comment