இசை அமைப்பாளர்களுக்குள் திடீர் போட்டி எழுந்துள்ளதால் பரபரப்பாக ஏதாவது செய்து பப்ளிசிட்டி தேடுவதாக புகார் எழுந்துள்ளது. ஹீரோ, ஹீரோயின்களுக்குள் போட்டி என்பது தவிர்க்க முடியாததாகி இருந்த நிலையில் பனிப்போரில் ஈடுபட்டு வந்த நயன்தாரா, த்ரிஷா திடீர் தோழிகள் ஆயினர்.
ஹீரோக்கள் மத்தியிலும் சில வருடங்களுக்கு முன்புவரை போட்டி இருந்து வந்தது. நட்சத்திர கிரிக்கெட் டீம் தொடங்கியபிறகு அவர்களுக்குள் இடைவெளி குறைந்து நட்பு மலர்ந்திருக்கிறது.
இந்நிலையில் தானுண்டு தன் வேலை உண்டு என்றிருந்த இசை அமைப்பாளர்களுக்குள் திடீர்போட்டி எழுந்துள்ளது. பரபரப்பாக அறிவிப்புகள் வெளியிட்டு ஸ்டன்ட் அடிக்கின்றனர். இந்த பப்ளிசிட்டி ஸ்டன்ட்டை ஒவ்வொருவரும் வெவ்வேறுவிதமாக செய்வதாக கூறப்படுகிறது.
ஒய் திஸ் கொலவெறிடி பாடல் மூலம் பாப்புலர் ஆன அனிரூத் நடிக்க வருகிறேன் என்று சொல்லிவிட்டு பின்வாங்கிவிட்டார். பின்னர் ஆண்ட்ரியாவுடன் அவர் நெருக்கமாக இருக்கும் போட்டோ மீடியாவில் வெளியானது. இதை அனிரூத்தே வெளியிட்டதாக தகவல் கசிந்தது.
தற்போது யூ டியூபில் பெண்களை இழிவு படுத்தும் வகையில் இசை ஆல்பம் பாடல் வெளியிட்டதாக அவர் மீது புகார் எழுந்ததையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் அனிரூத் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது வரை செல்லும் நிலை எழுந்துள்ளது. இது எல்லாமே பப்ளிசிட்டி ஸ்டான்ட் என சினிமா உலகை சேர்ந்த சிலர் குற்றம் சாட்டுகிறார்கள்.

0 comments:
Post a Comment