வாய்ப்பில்லாமல் படிக்க சென்ற அர்ச்சனா கவி, மீண்டும் நடிக்க வந்தார். அரவான், ஞானகிறுக்கன் படங்களில் நடித்திருப்பவர் மல்லுவுட் நடிகை அர்ச்சனா கவி. மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
திடீரென்று அவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதையடுத்து பேஷன் டிசைன் படிக்கச் சென்றார். இந்நிலையில் அவரது தோழியும் நடிகையுமான அன் அகஸ்டின் திருமணத்தில் சமீபத்தில் கலந்துகொண்டார். வாய்ப்பு குறைந்தவுடன் ஹீரோயின்கள் திருமணம் செய்துகொள்கின்றனர்.
உங்களது திருமணம் எப்போது? என்று அர்ச்சனா கவியிடம் கேட்டபோது, இப்போதைக்கு எனது திருமணம் நடக்காது. 2 வருடத்துக்கு பிறகுதான் எனது திருமணம்பற்றி யோசிப்பேன். சமீபத்தில்தான் பேஷன் டிசைனிங் பட்டப்படிப்பை முடித்தேன்.
மீண்டும் படங்களில் நடிக்க வாய்ப்பு வருவதால் நடிக்க முடிவு செய்துள்ளேன் என்றார். டு நூர் வித் லவ் என்ற மலையாள படத்தில் டாக்டர் வேடத்தில் அர்ச்சனா நடிக்க உள்ளார். இப்படத்தில் அவரது மற்றொரு தோழி மம்தா மோகன்தாஸும் நடிக்க உள்ளார்.

0 comments:
Post a Comment