தமிழ் சினிமாவின் மிகப்பெரும் அடையாளமாகவும், ஆகச் சிறந்த ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் போற்றப்படும் பாலுமகேந்திரா இன்று தனது 74 ஆம் வயதில் மாரடைப்பினால் காலமானார்.
தமிழ் சினிமாவின் புகழினை இந்தியாவெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குச் சொந்தக்காரர் பாலுமகேந்திரா. ஒளிப்பதிவாளராகத் திரைத்துறையில் நுழைந்த பாலுமகேந்திரா தனது முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதினை வென்றார். அன்று முதல் இன்று வரை எண்ணற்ற ஒளிப்பதிவாளர்கள், இயக்குனர்களின் ஆஸ்தான குருவாகத் திகழ்ந்துவந்தவர் பாலுமகேந்திரா.
சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த இயக்குனர் ஆகிய தேசிய விருதுகளைப் பலமுறை பெற்றவர் பாலுமகேந்திரா. தமிழ் சினிமாவின் தற்போதையை ஆகச் சிறந்த ஒளிப்பதிவாளர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் பாலுமகேந்திரா.
இவர் இயக்கிய மூன்றாம் பிறை, மூடுபனி, வண்ணவண்ணப் பூக்கள், தலைமுறைகள் போன்ற படங்கள் காலங்கள் கடந்தும் மக்கள் மனத்தில் நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
2014 ஆம் ஆண்டு முதல் இழப்பாக காட்சிகளில் கவிதைய் எழுதும் பாலுமகேந்திராவை இழந்திருக்கிறது தமிழ்த் திரையுலகம். ஈடு செய்யமுடியாத
இழப்பாக அமைந்திருக்கிறது பாலுமகேந்திராவின் மறைவு. தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த முன்னோடியான பாலுமகேந்திராவின் ஆன்மா
சாந்தியடைய வேண்டுகிறோம்...

0 comments:
Post a Comment