கர்நாடக வீட்டு வசதித்துறை அமைச்சரும், பிரபல நடிகருமான அம்பரீஷ் வெள்ளிக்கிழமை அன்று மூச்சுத் திணறலால் அவதிப்பட்டுள்ளார்.
அவர் பெங்களுரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு வயது 61.
மூத்த மருத்துவர் ரெங்கநாத நாயக் கூறுகையில் தற்போது அவருக்கு மூன்று அனுபவமிக்க மருத்துவர்கள் அவரது உடல்நிலையை கண்கானித்து வருகிறார்கள். இன்னும் சில நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று கூறினார்.
மேலும் அவரை நலம் விசாரித்த முதல்வர் சித்தாராமையா செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்போது அம்பரீஷ் நலமாக உள்ளார் என்றும் ரகிகர்கள் கவலை கொள்ள தேவையில்லை என்று கூறினார்.
மெகா ஸ்டார் சிரஞ்சீவி நேற்று மருத்துவமனைக்கு சென்று நண்பரின் நலம் விசாரித்தள்ளார்.
0 comments:
Post a Comment