Monday, 17 February 2014

Leave a Comment

பப்ளிசிட்டிக்காக எந்த எல்லைக்கும் போகும் ‘தி டே’..!



ஸ்ருதிஹாசன் பாலியல் தொழிலாளி நடித்த ‘தி டே’ என்னும் படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்ய உள்ளதாக அதன் தயாரிப்பாளர்களில் ஒருவர் தகவல் வெளியிட்டவுடன் கொதித்தெழுந்த ஸ்ருதிஹாசன் தமிழில் இந்த படத்தை மொழிமாற்றம் செய்தால் சட்டப்படி வழக்கு தொடருவேன் என பயமுறுத்தினார்.

இதனால் சில நாட்களுக்கு முன் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ‘தி டே’ படத்தின் தமிழ் மொழியாக்கம் வருகிற 14 ஆம்தேதி ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ளது. தயாரிப்பாளர் எதிர்பார்த்ததை விட அதிக தியேட்டர்கள் புக் ஆகியுள்ளன. இந்நிலையில் இந்த படம் குறித்து ஸ்ருதிஹாசனும், தயாரிப்பாளரும் சேர்ந்து நடத்திய நாடகம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

முதலில் கடந்த மாதம் ‘தி டே ‘ படத்தின் தயாரிப்பாளர் முடிவு செய்தபோது, இந்த படத்தை வெளியிட யாருமே முன்வரவில்லை. பொதுவாக இந்தியில் வெளியான படங்களில் எவ்வளவு பெரிய நடிகர் நடித்திருந்தாலும், அதை அப்படியே தமிழில் டப் செய்தால் ஓடாது. இதற்கு சமீபத்திய உதாரணம் தனுஷ் நடித்த ராஞ்சன்னா படத்தை சொல்லலாம். இந்தியில் ராஞ்சன்னா நன்றாக ஓடினாலும், தமிழில் ஒரு வாரம் கூட ஓடவில்லை. எனவேதான் தயாரிப்பாளரும், ஸ்ருதிஹாசனும் இணைந்து இந்த எதிர்ப்பு நாடகத்தை நடத்தியதாக தகவல்கள் தற்போது கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே பேசிவைத்துதான் ஸ்ருதிஹாசன் வழக்கு தொடரப்போவதாக மிரட்டியுள்ளார் என்பது தற்போதுதான் பலருக்கு புரிந்துள்ளது. அவர்கள் எதிர்பார்த்தபடியே அதிக தியேட்டர்களும் புக் ஆகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் படம் ரிலீஸ் ஆனால்தான் தெரியும் இவர்களது நாடகம் எந்தளவுக்கு வெற்றி பெற்றுள்ளது என்பது..

0 comments:

Post a Comment