இயக்குனர் பாலா தனது பரதேசி திரைப்படத்திற்குப் பிறகு கரகாட்டத்தை மையப்படுத்தி புதிய படமொன்றை இயக்கவுள்ளார். இப்படத்தில் சசிக்குமார்
நடிக்கவுள்ளார். சசிக்குமாரின் ஜோடியாக வரலக்ஷ்மி நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் நாயகியாக ஷ்ரேயா நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் தற்பொழுது வரலக்ஷ்மி நடிப்பார்
என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஷ்ரேயாவை விடவும் வரலக்ஷ்மி மிகச் சிறப்பாக நடனமாடுவதாலும், தமிழ் நன்றாகப் பேசவரும் என்பதாலும் இப்படத்தில் வரலக்ஷ்மி நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
முதலில் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பார் என்று அறிவிக்கப்பட்ட இப்படத்திற்கு, ஜி.வி.பிரகாஷிற்குப் பதிலாக இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. பாலாவின் பல படங்களுக்கு இசைஞானி இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பரதேசி படத்தினைப் போலவே இப்படமும் விருதுகளையும், மக்களின் மனத்தினையும் கொள்ளை கொள்ளுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

0 comments:
Post a Comment