Wednesday, 12 February 2014

Leave a Comment

அஞ்சானில் விவேக்..!



இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா சமந்தா நடிப்பில் உருவாகிவரும் அஞ்சான் திரைப்படத்தில் விவேக் இணைந்துள்ளார்.

திருப்பதி பிரதர்ஸ் மற்றும் யு.டி.வி.மோசன்பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துவரும் அஞ்சான் திரைப்படம் படுவேகமாகப் படம்பிடிக்கப்பட்டுவருகிறது. கடந்த நவம்பர் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்புகள் மளமளவென நடைபெற்றுவருகின்றன. இப்படத்தின் டைட்டிலை அறிவிப்பதற்கு முன்னமே முதல்கட்டப் படப்பிடிப்புகள் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

மஹாராஷ்டிரா, மும்பை, புனே ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்றுவருகின்றன. சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ள இப்படத்தில் நகைச்சுவை நடிகர் விவேக் சமீபமாக இணைந்துள்ளார். சூர்யா - விவேக் கூட்டணியில் சிங்கம், சிங்கம்-2 ஆகிய இரண்டு படங்களின் நகைச்சுவைக் காட்சிகளும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதனையடுத்து அஞ்சான் திரைப்படத்திலும் விவேக் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

அஞ்சான் திரைப்படத்தில் நகைச்சுவை வேடத்தில் சூரி நடிப்பார் என்று ஏற்கெனவே கூறப்பட்டிருந்தது. சூரியும் இப்படத்தில் நடித்தால் அஞ்சானில் மொத்தம் இரண்டு பிரபல நகைச்சுவை நடிகர்களின் காமெடிக் காட்சிகள் இடம்பெறும் படமாக அமையும்.

அஞ்சான் திரைப்படம் வருகிற ஆகஸ்டு பதினைந்து அன்று வெளியாகவுள்ளது.

0 comments:

Post a Comment