விஷால் பிலிம் பேக்டரி மற்றும் யு.டி.வி.மோசன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துவரும் நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் நிறைவடையவுள்ளன். இதையடுத்து இப்படத்தினை வருகிற ஏப்ரலில் வெளியிட படக்குழு முடிவுசெய்துள்ளது.
விஷால் - லக்ஷ்மிமேனன் நடிப்பில் உருவாகிவரும் நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தை இயக்குனர் திரு இயக்கிவருகிறார். ஜி.வி.பிரகாஷ்குமார்
இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் மிகச் சிறப்பாக அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இன்னும் சில தினங்களில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடையவுள்ளன. அதையடுத்து போஸ்ட் புரொடக்சன் மற்றும் டப்பிங் வேலைகள் நடைபெறும். வருகிற மார்ச் 7 ஆம் தேதிக்குள் படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.
ஐந்தே மாதங்களில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடையவிருப்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் அனைத்து வேலைகளும் விரைவில்
நிறைவடையவிருப்பதால் இப்படத்தினை வருகிற ஏப்ரலில் வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது.
ஏப்ரல் 11 ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - தீபிகாபடுகோன் நடித்த கோச்சடையான் திரைப்படம் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்தின் கோச்சடையானுடன் விஷாலின் நான் சிகப்பு
மனிதன் மோதவுள்ளதா என்பது விரைவில் தெரியவரும்.

0 comments:
Post a Comment