Wednesday, 12 February 2014

Leave a Comment

அருண்விஜயின் ''வா டீல்'' படப்பிடிப்புகள் இன்றுடன் நிறைவடைகிறது..!



அருண்விஜய் - கார்த்திகா இணைந்து நடித்துவரும் வா டீல் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இன்றுடன் நிறைவடைகின்றன.

பீதர் டச் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துவரும் இப்படத்தினை அறிமுக இயக்குனர் சிவ ஞானம் இயக்கிவருகிறார். தமன் இப்படத்திற்கு
இசையமைத்துவருகிறார்.

கடந்த ஜனவரி மாதம் இப்படத்தின் தலைப்பான டீல் என்பதை வா டீல் என்று மாற்றியது படக்குழு. பழனி, சென்னை மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று இன்று நிறைவடைகின்றன.

ஜெயப்பிரகாஷ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தில், சதீஷ் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார். அருண் விஜய் - மகிழ்திருமேனி
கூட்டணியில் வெளியான தடையறத்தாக்க திரைப்படத்தின் வில்லனான வம்சி இப்படத்திலும் வில்லனாக நடித்துள்ளார்.

விரைவில் இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் மற்றும் டப்பிங் வேலைகள் துவங்கவுள்ளன. இப்படம் வருகிற ஏப்ரலில் வெளியாகலாம் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment