Wednesday, 12 February 2014

Leave a Comment

அவர்களால் எப்படி முடிந்தது..? வியக்கும் ரஜினிகாந்த்...!



இப்படித்தான் படமெடுக்கவேண்டும்... என்ற வரைமுறையை மாற்றி, புது டிரெண்டை உருவாக்குவது பெரிய இயக்குனர்களால் தான் முடியும் என்ற நிலை இருந்து வந்தது. ஆனால் ஒவ்வொரு டிரெண்டையும் மாதத்திற்கு ஒருமுறை புது இயக்குனர்களால் தகர்த்தெரியும் பணியை துவங்கியுள்ள தமிழ் சினிமா அதை நல்லபடியாகவே செய்துவருகிறது.

பாண்டிராஜ் பசங்க திரைப்படத்தின் மூலம் உருவாக்கிய டிரெண்டை, கோலிசோடா திரைப்படத்தின் மூலம் தகர்த்தெரிந்திருக்கிறார் விஜய் மில்டன். நான்கு சிறுவர்களை வைத்து ஒரு ஆக்‌ஷன் திரைப்படத்தை கொடுத்திருக்கும் விஜய் மில்டனை, திரையுலகமே கொண்டாடிவருகிறது. அதிலும் இடைவெளிக்குப் பிறகு கோயம்பேடு மார்கெட்டில் நடக்கும் சண்டைக்காட்சிகளைத்தான் அனைவரும் சிலாகிக்கிறார்கள்.

வாழ்த்து மழையில் குளித்துக்கொண்டிருக்கும் கோலிசோடா படக்குழுவினருக்கு மேலும் மகிழ்ச்சியூட்டும் விதத்தில் அமைந்தது எதிர்பாராத ரஜினியின் வாழ்த்து தான். கோலிசோடா படத்தை பார்த்தபிறகு அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமிக்கு ஃபோன் செய்த ரஜினி மிக அருமையான படத்தை தமிழ் சினிமாவிற்கு கொடுத்திருக்கிறீர்கள் என்று பாராட்டினாராம். அதிலும் கோயம்பேடு மார்கெட்டில் நடக்கும் சண்டைக் காட்சிகளைப் பற்றி அதிகம் பேசிய ரஜினி, அவ்வளவு பிசியான இடத்தில் எப்படி படப்பிடிப்பு நடத்த முடிந்தது என்று வியந்திருக்கிறார்.

0 comments:

Post a Comment