சிம்பு தற்போது ‘போடா போடி’, ‘வாலு’, ‘வேட்டை மன்னன்’ படங்களில் நடித்து வருகிறார். இவற்றின் படப்பிடிப்பு முடிந்ததும் திருமணம் நடக்கும் என தெரிகிறது.
சிம்பு திருமணம் குறித்து காளகஸ்தி கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு வந்த அவரது தந்தையும், இயக்குனருமான டி.ராஜேந்தர் கூறியதாவது:-
சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடத்த முடிவு செய்துள்ளோம். எனது மகள் இலக்கியா திருமணம் முடிந்ததும் சிம்புவுக்கு திருமணம் செய்து வைக்கப் போகிறோம்.
நான் தற்போது “ஒரு தலைக்காதல்” என்ற படத்தை இயக்க உள்ளேன். இப்படத்துக்கு நானே கதை, திரைக்கதையும் எழுத உள்ளேன். இப்படத்தில் புதுமுக நடிகர், நடிகைகளை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளேன். எனது இளைய மகன் குறளரசனையும் கதாநாயகனாக அறிமுகப்படுத்த உள்ளேன். அந்த படம் பற்றிய அறிவிப்பு ஓரிரு மாதங்களில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு டி.ராஜேந்தர் கூறினார்.

0 comments:
Post a Comment