Tuesday, 11 February 2014

Leave a Comment

யுவன்`ஐ தொடர்ந்து மதம் மாற நிர்ப்பந்தம் செய்யும் கணவரை விவாகரத்து செய்வேன்

மதம் மாற நிர்ப்பந்தம் செய்யும் கணவரை விவாகரத்து செய்வேன்:- நடிகை ஷர்மிளா


‘கிழக்கே வரும் பாட்டு’, ‘ஒயிலாட்டம்’, ‘முஸ்தபா’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் ஷர்மிளா. இவர் 6 ஆண்டுகளுக்கு முன் ராஜேஷ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐந்து வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், ஷர்மிளாவுக்கும், ராஜேசுக்கும் தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. கணவர் தன்னை மிரட்டுவதாக போலீஸ் கமிஷனரிடம் ஷர்மிளா புகார் அளித்துள்ளார். கணவரை விவாகரத்து செய்யவும் முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து ஷர்மிளா கூறியதாவது:–

நான் கிறிஸ்தவ பெண். என்னை இந்து மதத்துக்கு மாறும்படி கணவர் நிர்ப்பந்திக்கிறார். வெளியாட்களுடன் பேசவும் தடை போடுகிறார். என் மேல் அவர் சந்தேகப்படுகிறார். இரவில் செல்போனில் பேசி மிரட்டுகிறார். அவருடன் இனிமேல் வாழமுடியாது. எனவே அவரை விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளேன்.

ஆரம்பத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் சம்மதத்துடன் பிரிய திட்டமிட்டோம். தற்போது விரைவில் அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளேன். இதற்கான பணிகள் துவங்கி உள்ளன. எனது மாமியாரும் தொல்லை கொடுக்கிறார். என் குழந்தையையும் கடத்தி போய் விட்டனர்.

இவ்வாறு ஷர்மிளா கூறினார்.

0 comments:

Post a Comment