Wednesday, 12 February 2014

Leave a Comment

லூசியா ரீமேக் துவங்கியது...!



கடந்த ஆண்டு வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்த கன்னடப்படமான லூசியா திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் சித்தார்த் மற்றும் தீபா சன்னிதி
நடிக்கவுள்ளனர்.

இப்படத்தின் தமிழ் ரீமேக்கினை பீட்சா, சூதுகவ்வும் திரைப்படங்களைத் தயாரித்த திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துவரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்கியுள்ளன.

அறிமுக இயக்குனர் பவன்குமார் இயக்கிய லூசியா திரைப்படம் கன்னடத்தில் மாபெரும் வெற்றிகளைக் குவித்ததுடன் பல்வேறு விருதுகளையும், பரவலான விமர்சனங்களையும் பெற்றது.

இதன்காரணமாக இப்படத்தின் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ரீமேக்குகளுக்காக தயாரிப்பாளர்கள் போட்டியிடத்துவங்கினர். ஹிந்தியில் தயாராகும் இப்படத்தின் ரீமேக்கில் இயக்குனர் பவன்குமாரே
இயக்கவுள்ளார்.

தமிழில் இதன் ரீமேக்கினை அறிமுக இயக்குனர் பிரசாத் ராமர் இயக்கிவருகிறார்.

0 comments:

Post a Comment