தொடர் வெற்றிகளை ருசித்து வரும் விஜய்சேதுபதி தனது படங்களை தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருக்கிறார். ஒரு தோல்வி படம் கொடுத்து விட்டால் அதை சரிசெய்ய அடுத்தடுத்து இரண்டு ஹிட் படம் கொடுத்தாக வேண்டும்.
சம்பளமும் பாதியாக குறைந்து விடும். அதோடு விழுந்து விழுந்து எழுவதற்கு தான் மாஸ் ஸ்டார் இல்லை என்பதையும் அறிந்து வைத்திருக்கிறார்.
அதனால் தான் நடிக்க தகுதியான கதையை தேர்வு செய்ய கதை விவாதகுழு ஒன்றை அமைத்திருக்கிறார். அதில் தனக்கு நெருக்கமான நண்பர்கள் 5 பேரை அமர்த்தியிருக்கிறார்.
விஜய் சேதுபதிக்கு யார் கதை சொல்ல சென்றாலும் இந்த கதை விவாத குழுவிடம்தான் சொல்ல வேண்டும். 5 பேருக்கும் ஓகே என்றால்தான் அந்த கதையை விஜய்சேதுபதி கேட்பாராம்.
அப்படி சமீபத்தில் கதை குழுவால் ஓகே செய்யப்பட்ட கதைதான் மெல்லிசை. புதுமுக இயக்குனர் ரஞ்சித், 5 பேருக்கும் கதை சொல்லி அவர்களை ஓகே சொல்ல வைத்து விட்டார். த்ரில்லர் கதை. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடிக்கிறார். நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்துக்கு பிறகு இருவரும் மீண்டும் இணைகிறார்கள்.

0 comments:
Post a Comment