இயக்குனர் சசிக்குமார், லாவன்யா திரிப்பாதி நடிப்பில் உருவாகியிருக்கும் பிரம்மன் திரைப்படம் வருகிற பிப்ரவரி 21ல் திரைக்கு வருகிறது.
இப்படத்தின் இயக்குனரான சாக்ரடீஸ் சசிக்குமாருக்காக தான் ஒன்றரை ஆண்டுகள் காத்திருந்ததாகக் கூறியிருக்கிறார்.
மஞ்சு சினிமாஸ் மற்றும் ஆண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தில் சசிக்குமார் தனது வழக்கமான கிராமத்து
முரட்டு மனிதர் என்கிற தோற்றத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு நகரத்து இளைஞனாக நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தில் சசிக்குமார் நடித்தால்தான் சிறப்பாக இருக்குமென்பதால் இப்படத்தின் இயக்குனரான சாக்ரடீஸ் சசிக்குமாருக்காக சுமார் ஒன்றரை வருடங்கள் காத்திருந்ததாகக்
குறிப்பிட்டுள்ளார்.
தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் சந்தானம், சூரி, ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தில் நடிகை பத்மப்பிரியாவும் சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இயக்குனர் சாக்ரடீஸ் உலகநாயகன் கமல்ஹாசனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment