Wednesday, 12 February 2014

Leave a Comment

நண்பனுக்காக கமல் எழுதி பாடிய பாடல்...!



கமலஹாசனும், இயக்குனர் ஆர்.சி. சக்தியும் நெருக்கமான நண்பர்கள். இருவரும் அன்னை வேளாங்கண்ணி படத்தில் உதவி இயக்குனர்களாக பணியாற்றியவர்கள். இருவரும் ஒரே அறையில் தங்கி வாய்ப்பு தேடியவர்கள்.

பல எதிர்ப்புகளுக்கிடையே கமலை உணர்ச்சிகள் படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்தவர். இருவரும் காரைக்குடியை சேர்ந்தவர்கள். அண்மையில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் கூட நான் இயக்குனராக தூண்டுகோலாக இருந்தவர் என் நண்பர் ஆர்.சி.சக்தி என்று கமல் கூறியிருந்தார்.

சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த ஆர்.சி.சக்தி தற்போது ரோஜாக்கள் 5 என்ற குறும்படம் ஒன்றை டைரக்ட் செய்து வருகிறார். இதுபற்றி கேள்விப்பட்ட கமல் நேராக படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கே சென்று “நான் ஏதாவது உதவி செய்ய வேண்டுமா சக்தி?” என்று கேட்டார்.

அதற்கு ஆர்.சி.சக்தி “இந்தப் படத்தில் ஒரு பாடல் வருகிறது. அதை நீயே எழுதித் தரமுடியுமா?” என்று கேட்டிருக்கிறார். “எழுதியென்ன பாடியே தருகிறேன்” என்று சொன்ன கமல். இசை அமைப்பாளர் ஷ்யாமிடம் டியூனை கேட்டு வாங்கி ஒரே நாளில் பாடலை எழுதி பாடியும் கொடுத்துவிட்டார்.

0 comments:

Post a Comment