Tuesday, 11 February 2014

Leave a Comment

இந்த நெருக்கடியில விஸ்வரூபத்தை வேற வாங்கணுமா..? ஷங்கர் கொந்தளிப்பு..!



மகா மெகா பட்ஜெட் படங்கள் பேங்க் பேலன்சை மட்டுமல்ல, சமயங்களில் ரத்தத்தையும் உறிஞ்சி எடுத்துவிடும். படம் வெளியானால் வட்டியும் முதலுமாக லாபம் கிடைத்தாலும் அதை உருவாக்கி வெளியிடுவதற்குள் தாவு தீர்ந்து தக்காளி ரசமாகிவிடுவார்கள் தயாரிப்பாளர்கள்.

 அப்படிதான் ஐ உறிஞ்சிக் கொண்டிருக்கிறதாம் ஆஸ்கர் ரவிச்சந்திரனை. ஒரே நேரத்தில் பல படங்களை அவர் தயாரிப்பதுதான் இந்த சிக்கலுக்கு காரணம் என்று கருதுகிறாராம் டைரக்டர் ஷங்கர். இது குறித்து அவர் நேரடியாக விவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

ஐ படத்தை நகர்த்தவே ஆன மட்டும் போராட வேண்டியிருக்கிறது. இந்த நேரத்தில் விஸ்வரூபம் படத்தை வாங்கி வெளியிட வேண்டுமா என்பதுதான் அவரது கேள்வியாக இருக்கிறதாம். கடந்த சில வாரங்களாகவே ஐ படப்பிடிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாம்.

எல்லாம் பைனான்ஸ் பிரச்சனை. கொடைக்கானலில் போடப்பட்ட செட் பனியிலும் வெயிலிலும் காய்ந்து கொண்டிருக்க, அந்த செட்டை கலைத்துவிடுங்கள். ஷுட்டிங் போக முடிவெடுத்தபின் பார்த்துக் கொள்ளலாம் என்று சற்று கோபமாகவே ஷங்கர் கூறியதாகவும் தகவல் வருகிறது.

நடுநடுவே இந்த படத்தை மொத்தமாக வாங்கிக் கொள்ளும் ஆசை காட்டுகிறதாம் வடக்கை சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று. உங்களால் முடியலேன்னா பேசாம அவங்ககிட்ட கை மாற்றிவிட்டுட்டா எல்லா பிரச்சனையும் சால்வ் ஆகிடும். என்ன சொல்றீங்க என்று ஷங்கர் போராடி வருவதாகவும் கூறப்படுகிறது.

 இனியும் பொருத்திருந்தால் தனது இத்தனை ஆண்டு கால பெருமையை இவர் ஒருவரே ஏலம் போட்டுவிடுவார் என்பதை உணர்ந்த தயாரிப்பாளர், தனக்கு சொந்தமான சில தியேட்டர்களை விற்கும் முடிவை எடுத்திருப்பதாகவும் கிசுகிசுக்கிறார்கள்.

இதற்கிடையே படத்தின் ஹீரோவுக்கு கொடுக்கப்பட்ட செக் ரிட்டர்ன் ஆகிவிட அவரும் கொதிப்பில் இருக்கிறாராம். இப்படி நாலாப்புறமும் பிரச்சனை வாட்டி எடுக்க, கூலாக உருவாகிக் கொண்டிருக்கிறது அத்தனை வெற்றிகளையும் தன்னகத்தே அடக்கிக் கொண்டிருக்கும் ஐ.

0 comments:

Post a Comment