காதலர் தினத்தை கண்டு பிடித்தவன் கையில் கிடைத்தால் அவனை பொடிமாஸ் ஆக்கிவிடவும் தயங்காத கட்சிகள் வடக்கில் உண்டு. முக்கியமாக சிவசேனா. அந்த நாளில் கையில் கட்டையோடு திரியும் தொண்டர்கள் (குண்டர்கள்) எங்காவது காதல் ஜோடிகளை கண்டால் நையப்புடைத்து நாக்கு தள்ள வைத்துவிடுவார்கள். அப்படியிருந்தும் வருடா வருடம் இவர்களிடம் அடிவாங்கி அவமானப்படும் காதல் ஜோடிகள் பெருகிக் கொண்டே போவதுதான் சோகம்.
அந்த வடக்கு குண்டாஸ் தெற்கேயும் தனது அதிரடி வேகத்தை அறிமுகப்படுத்தி வைக்க, இங்கேயும் அதுபோன்ற மிரட்டல்கள் உருட்டல்கள் காதலர்களை கண்ணை கசக்க வைத்துக் கொண்டேயிருக்கிறது. தேவையா இதெல்லாம்? என்னாத்துக்கு லவ்வு? என்னாத்துக்கு அதுக்கொரு டே? என்றெல்லாம் அலுத்துக் கொள்ளும் பொதுமக்களுக்கு மத்தியில் எப்போதும் போல்டாக குரல் கொடுப்பவர் குஷ்புதான். இதோ- காதலர் தினம் நெருங்கும் நாள். என்ன சொல்லப் போகிறார் குஷ்பு.
தவறுகள் அன்னைக்கு மட்டும்தான் நடக்குதா? நாட்டில் பல இடங்களில் கற்பழிப்புகள் நடக்குதே? அதை எதிர்த்து போராடுறாங்களா? இவங்க எல்லாம் வேலை வெட்டி இல்லாதவங்க. ஏதோ மனநிலை பாதிக்கப்பட்டவங்க மாதிரி எனக்கு தெரியுது என்று கூறியிருக்கிறார்.
காதலர்களை விட்டுட்டு குஷ்புவை நோக்கி குண்டாந்தடியை ஏவி விட்ற போறாங்க. ஜாக்கிரதை மேம்…!

0 comments:
Post a Comment