ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ இயக்கும் இரண்டாவது படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கவுள்ளார். இப்படம் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் உருவாகவிருக்கும் ஐம்பதாவது படமாகும்.
வசந்தபாலன் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான வெய்யில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்குமார். அறிமுகப்படத்திலேயே தான் மிகச் சிறந்த இசையமைப்பாளர் என்பதை நிரூபித்தார். அதன் பிறகு இவரது இசையில் வெளிவந்த பாடல்கள் மெஹாஹிட்டாகின.
சமீபமாக மதயானைக்கூட்டம் திரைப்படத்தைத் தயாரித்ததன் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார் ஜி.வி.பிரகாஷ்குமார். தயாரிப்பாளர் என்ற
நிலையிலிருந்து தற்பொழுது பென்சில் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் மாறவுள்ளார்.
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ்குமாரே இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்களும்
மெஹாஹிட்டாகின. அதைத்தொடர்ந்து அட்லீ இயக்கும் இரண்டாவது படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ்குமாரே இசையமைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகவுள்ளன.

0 comments:
Post a Comment