Tuesday, 11 February 2014

Leave a Comment

விஜய்க்கு புது வில்லன்...!



இளையதளபதி விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து உருவாக்கிவரும் புதிய திரைப்படத்தில் வில்லனாக வங்காள நடிகரான டோட்டா ராய் நடிக்கவுள்ளார்.

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகிவருகிறது வாள் திரைப்படம். கடந்த வாரம் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்பொழுது கல்கத்தாவில் நடைபெற்றுவருகிறது.

 விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படமான இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிப்பவர் குறித்த அறிவிப்புகள் வெளியாகாமல் இருந்துவந்தது.

 எப்படியும் ஒரு தேர்ந்த நடிகர் விஜய்க்கு வில்லனாக நடித்தால்தான் சிறப்பாக இருக்குமென்பது விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. அவர்களின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யும்விதமாக வங்காள நடிகரான டோட்டா ராய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகிவரும் இப்படத்தின் கதையைப் பற்றியும் அவர் தற்செயலாகக் கூறியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் கிசுகிசுக்கள் பரவிவருகின்றன.

சமந்தா ஹீரோயினாக நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துவருகிறார்.

0 comments:

Post a Comment