இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் மற்றும் லக்ஷ்மிமேனன் நடிப்பில் உருவாகிவரும் ஜிகர்தண்டா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி வெளியானது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் இந்த டீசரை சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
பீட்சா திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிவரும் இரண்டாவது திரைப்படம் ஜிகர்தண்டா. இப்படம் வெளியாவதற்கு
முன்பே பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பிவருகிறது.
முக்கியமாக ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள இந்த ஆண்டின் தவறவிட்டுவிடக் கூடாத படங்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்ததைக் கூறலாம். அத்துடன் தற்பொழுது வெளியாகியிருக்கும் இப்படத்தின் டீசரும் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.
கதிரேசன் தயாரித்துவரும் இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. பீட்சா படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணனே
இப்படத்திற்கும் இசையமைத்துவருகிறார். வருகிற ஜூன் மாதத்தில் இப்படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
போஸ்டர்கள் நாளை வெளியாகவுள்ளன.

0 comments:
Post a Comment