காஷ்மீர் பையனை சைட் அடித்தேன் என்றார் யாமி கவுதம். ராதா மோகன் இயக்கிய கவுரவம் படத்தில் நடித்தவர் யாமி கவுதம். இந்தி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அவர் கூறியதாவது:சினிமாவில் நடிப்பேன் என்று எண்ணிப்பார்த்ததில்லை. விக்கி டோனர் என்ற இந்தி படம் மூலம் நடிகையானேன். சூஜித் சிர்கர் இயக்கினார். முதல் நாள் ஷூட்டிங்கில் 100 சதவீதம் நடிக்க வேண்டும் என்று ஆர்வக் கோளாறில் நடித்தேன். ஆனால் இயக்குனர் என்னை எல்லோர் எதிரிலும் திட்டினார்.
எப்படி நடிக்கிறாய்? இது டிவி சீரியல் இல்லை என்று சத்தம்போட்டார். அவமானத்தில் எனது அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டு கதறி அழுதேன். அன்று இரவு முழுவதும் தூங்கவும் இல்லை. மறுநாள் காலை வழக்கம்போல் ஷூட்டிங்கிற்கு சென்றேன்.
அப்போது இயக்குனர் ஒரு வீடியோவை போட்டுக்காட்டினார். நடிகை தேர்வு நடந்தபோது நான் நடித்த காட்சி அது. ஓவர் ஆக்டிங் இல்லாமல் யதார்த்தமாக நடித்திருந்தேன். இதில் நடித்திருக்கிறாய் பார்த்தாயா... இதுதான் எனக்கு தேவை. உன்னுடைய ஓவர் ஆக்டிங் தேவையில்லை என்றார். அன்றுதான் அவரை புரிந்துகொண்டேன்.
அதன்பிறகு ஒருநாள் கூட என்னிடம் அவர் சத்தம்போட்டது கிடையாது. இதுவரை என்னைப்பற்றி காதல் கிசுகிசு வரவில்லையே என்கிறார்கள். இதுவரை யாரையும் காதலித்தது இல்லை. நான் டியூஷனுக்கு ரிக்ஷாவில் செல்லும்போது என்னை சுற்றி இளசுகள் வட்டமடிப்பார்கள். யாரிடமும் எனக்கு காதல் இல்லை. காஷ்மீர் பையன் ஒருவனை எனக்கு ரொம்ப பிடிக்கும். தூரத்திலிருந்தே அவனை நான் சைட் அடித்தேன். அவன் பெயர்கூட எனக்கு தெரியாது. எனக்கும் காதலுக்கும் உள்ள தொடர்பு இதுதான். இவ்வாறு யாமி கவுதம் கூறினார்.

0 comments:
Post a Comment