Tuesday, 25 February 2014

Leave a Comment

முத்தம்`லா எனக்கு அல்வா மாதிரி...எத்தனை முத்த காட்சி வேண்டுமானாலும் வையுங்க..!



படங்களில், முத்தக்காட்சி என்பது, சமீபகாலமாக அதிகரித்து விட்டது.

அதனால், கதை கேட்கும்போது, ‘முத்த காட்சிகளில் நடிக்க மாட்டேன்’ என்று, எந்த நடிகை கூறினாலும், அந்த ஸ்பாட்டிலேயே அவர்களை நிராகரித்து விடுகின்றனர், இயக்குனர்கள்.

இதனால், ‘நான் குடும்ப குத்துவிளக்கு’ என்று கூறி வந்த, லட்சுமி மேனன், ஸ்ரீதிவ்யா போன்ற நடிகைகளே தற்போது, முத்தக்காட்சி நடிகைகளாக மாறி விட்டனர்.

இதனால், தற்போது, சினிமாத் துறைக்குள் நுழையும் புதுமுக நடிகைகள், வரும்போதே, ‘முத்த காட்சியில் நடிக்க ரெடி’ என்று முன்மொழிந்து விடுகின்றனர்.

’ஆஹா கல்யாணம்’ படத்தில் நடித்துள்ள இந்தி நடிகை வாணி கபூர், இந்த விஷயத்தில், படுவேகமாக இருக்கிறார்.

‘இந்தி படங்களில், ஏராளமான முத்த காட்சிகளில் நடித்துள்ளேன். அதனால், எனக்கு, அந்த காட்சிகளில் நடிப்பதெல்லாம், சர்வ சாதாரணம். எத்தனை முத்த காட்சி வேண்டுமானாலும் வையுங்கள், நடிக்க, நான் ரெடி’ என, அதிரடியாக அறிவித்திருப்பதால், கோடம்பாக்கத்தில் கோலோச்சி வரும் நடிகைகள் நடுங்க ஆரம்பித்துள்ளனர்.

0 comments:

Post a Comment