தமிழ்த் திரையுலகில் மிகவும் எளிமையான கதாநாயகன் என்று பாராட்டப்படும் விஜய் சேதுபதி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் எல்லாவற்றையும் எளிமையென்று மக்களாகவே ஒரு முடிவினை எடுக்க வேண்டாமென்று கூறியுள்ளார்.
சமீபத்தில் பிரபல வார இதழ் நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பண்ணையாரும் பத்மினியும் திரைப்படக்குழுவும், அவ்விதழின் வாசர்களும்
பங்குகொண்டனர். அப்போது படத்தின் நாயகன் விஜய் சேதுபதி வழக்கம்போலவே எளிமையான தோற்றத்தில் கலந்துகொண்டாராம்.
வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சுவாரஸ்யமாகப் பதில் கூறிய விஜய் சேதுபதியிடம், ” நீங்கள் ஏன் பந்தா இல்லாமல் இருக்கிறீர்கள், ரப்பர்
செருப்புடன் வந்திருக்கிறீர்கள்?” என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு அவர் தான் அணிந்திருக்கும் செருப்பு 2000 ரூபாய் என்றும், தனக்கு ஷீ அணிந்தால் ஒத்துக்கொள்ளாது என்றும், அதனாலேயே இந்தச் செருப்பினை அணிந்துள்ளதாகவும், இப்படித்தான் எல்லோரையும் ஏகத்துக்குப் பாராட்டிவிடுகிறார்கள் என்றும் கூறினாராம்.
விஜய் சேதுபதியின் இந்தப் பதிலைக் கேட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் சிரிப்பலை எழுந்ததாம்.
அவர் சொல்றதுலயும் ஒரு நியாயம் இருக்குதானே......?

0 comments:
Post a Comment