சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் வெளியீட்டையொட்டி கார்பன் மொபைல் நிறுவனம் 10 லட்சம் சிறப்பு மொபைல் போன்களை வெளியிடுகிறதல்லவா... இந்த மொபைல்களை நாடு தழுவிய அளவில் 27000 செல்போன் கடைகளில் விற்பனை செய்கிறது கார்பன் நிறுவனம். இதனை அதிகாரப்பூர்வ பிரஸ் ரிலீஸ் மூலம் நேற்று அறிவித்தது.
இம்மாத இறுதியில் கோச்சடையான் படத்தின் இசை வெளியிடப்பட உள்ளது. இந்த இசை வெளியீட்டின்போதே, கோச்சடையான் டி சர்டுகள், ஆடியோ சிடியுடன் கிடைக்கும்.
இதுவரை வேறு எந்த நடிகரின் படத்துக்கும் செய்யாத புதுமையாக, ரஜினியின் கோச்சடையானுக்காகவே ஸ்பெஷல் மொபைல் போன்களை கார்பன் நிறுவனம் வடிவமைத்துள்ளது.
மொத்தம் பத்து லட்சம் போன்களை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது. இவற்றில் கோச்சடையான் திரைப்பட டிரெய்லர், பாடல்கள் மற்றும் படங்களுடன் விற்பனைக்கு வைக்கிறார்களாம்.
இந்த மொபைல் போன்களை தங்களின் 27000 டீலர்களின் ஷோரூம்களில் விற்பனைக்கு வைக்கவிருப்பதாக கார்பன் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஷோரூம்களில் கோச்சடையான் விளம்பர துண்டு பிரசுரங்கள், விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருக்கும்.
மேலும் கோச்சடையான் வெளியீட்டுக்கு முன் அப்படத்தின் 3 பக்க விளம்பரங்களை முன்னணி நாளிதழ்களில், அனைத்து முன்னணி மொழிகளிலும் வெளியிடவிருக்கின்றனர்.
பண்பலை வானொலிகளில் நாடு முழுவதும் 60000 நொடிகளுக்கு கோச்சடையான் விளம்பரங்கள் ஒலிபரப்பாகும். மேலும் டிவிக்களில் 6000 நொடிகளுக்கான கமர்ஷியல் டைமை கோச்சடையானுக்கு வாங்கியிருப்பதாக கார்பன் மொபைல் நிறுவனம் அறிவித்துள்ளது. இத்தகவல்களை கார்பன் மொபைல் நிறுவனத்தின் இயக்குநரும் புரமோட்டருமான சுதிர் ஹஸ்ஜிதா தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment