ஹீரோயின்களிடம் சகஜமாக பழகி அவர்களை தன் வலையில் வீழ்த்துவதில் 2வது இடத்தை பிடித்திருக்கிறார் கவுதம் கார்த்திக்.
ஆர்யா தன்னுடன் நடிக்கும் ஹீரோயின்களை வீட்டுக்கு அழைத்து பிரியாணி கொடுத்து அசத்துவதில் கில்லாடி. நயன்தாரா, அனுஷ்கா என்று பல ஹீரோயின்களுடன் அவரை இணைத்து கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளன.
அவருக்கு போட்டியாக வந்திருக்கிறார் கவுதம் கார்த்திக். அந்த காலத்தில் ஹீரோயின்களிடம் பிடித்த நடிகர் யார் என்று கேட்டால் உடனே கார்த்திக் பேரை சொல்வார்கள்.
தற்போது அந்த இடத்தை பிடிக்கும் சுட்டியாக இருக்கிறார் அவரது மகன் கவுதம் கார்த்திக். தனக்கு ஜோடியாக நடிக்கும் ஹீரோயின்களிடம் சிரித்து பேசி வசியம் செய்வதில் கில்லாடியாகிவிட்டார் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.
சமீபத்தில் ஒரு விருது விழாவுக்கு வந்த கவுதமை தன் அருகில் வந்து அமரச் சொல்லி நீண்ட நேரம் சிரித்துப்பேசிக்கொண்டிருந்தார் லட்சுமி மேனன்.
தற்போது ஐஸ்வர்யா இயக்கும் வை ராஜா வை என்ற படத்தில் பிரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு இங்கிலாந்து நாட்டை சேர்ந்த குருஸ் என்ற ஆடம்பர கப்பலில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கேளிக்கை விளையாட்டுகள் உள்ளன.
ஷூட்டிங் முடிந்ததும் கவுதமும், பிரியாவும் அங்கு சென்று விளையாடி மகிழ்கின்றனர்.
இதுபற்றி பிரியா ஆனந்த் கூறும்போது, ஷூட்டிங் முடிந்த கையோடு நானும் கவுதமும் கப்பலில் சுற்றித்திரிவதுதான் வேலை.
தியேட்டர், ஐஸ் ஸ்கேட்டிங் விளையாட்டு என்று பல பொழுதுபோக்கு அம்சங்களுக்கு சென்றோம். குங்பூ பாண்டாவின் ஆளுயர பொம்மை அங்கு இருக்கிறது.
அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டோம். கடினமான ஒரு கேமை எனக்காக விளையாடி கவுதம் நிறைய ஸ்கோர் செய்து காட்டி எனக்கு பரிசுகளை பெற்றுத்தந்தார் என்றார்.
0 comments:
Post a Comment