பஹத் பாசிலுக்கு பதில் ஆர்யா நடிப்பதாக வெளியான தகவலால் பட இயக்குனர் டென்ஷன் ஆனார். மல்லுவுட்டில் வளர்ந்து வரும் ஹீரோ பஹத் பாசில். லிஜோ ஜோஸ் இயக்கும் த்ரில்லர் கதையான ஆன்ட்டி கிரிஸ்ட் என்ற படத்தில் பஹத் நடிக்கிறார் என்று முதலில் தகவல் வெளியானது.
சில நாட்களில் படத்திலிருந்து பஹத் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஆர்யா நடிப்பதாக மல்லுவுட்டில் பேசப்பட்டது. இருவரில் ஹீரோவாக நடிப்பது யார் என்ற குழப்பம் எழுந்தது. இதுபற்றி இயக்குனரிடம் பலர் தொடர்பு கொண்டு இருவரில் யார் நடிப்பது என்று கேள்வி கேட்டு துளைத்தெடுத்தனர். டென்ஷனான இயக்குனர் படபடவென்று பதில் அளித்தார்.
அவர் கூறும்போது, இதுபோன்ற தகவல்கள் எப்படி வெளியாகிறது என்பது புரியவில்லை. ஆர்யா பற்றி நாங்கள் ஆலோசனைகூட செய்ததில்லை. குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் பஹத் பாசில்தான் நடிக்கிறார். மேலும் பிருத்விராஜ், இந்திரஜித் ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். இம்மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. மற்ற நட்சத்திரங்கள் யார் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஒரு விஷயத்தை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.
எந்தவொரு படமாக இருந்தாலும் அந்த கதாபாத்திரத்துக்கு எந்த ஹீரோ பொருத்தமாக இருப்பார் என்று ஆலோசிக்கும்போது பல ஹீரோக்கள் பெயர்களை யோசிப்பது உண்டு. அது வழக்கம்தான். ஷூட்டிங் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் ஹீரோ யார் என்று முடிவு எடுக்கப்படும். இப்படத்தில் ஆர்யாவை நடிக்க வைப்பதுபற்றி யோசித்துக்கூட பார்க்கவில்லை என்றார்.

0 comments:
Post a Comment