Saturday, 8 February 2014

Leave a Comment

கேன்சர் நோய் துணிச்சல் பெண்ணாக்கியது கவுதமி மம்தா..!



கேன்சர் எங்களை துணிச்சல் மிக்க பெண்ணாக்கியது என்றனர் கவுதமி, மம்தா மோகன்தாஸ். கறுப்பு வெள்ளை காலம் முதல் கலர் படங்கள்வரை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களைபற்றிய சினிமாக்கள் நிறைய வந்திருக்கின்றன. அதில் ஒருவரை கேன்சர் தாக்கினால் அவர்கள் வாழ்க்கை அத்துடன் முடிந்துவிடும் என்பதுபோல்தான் கதைகள் அமைக்கப்பட்டிருந்தன.

இது நோய் பாதித்தவர்களை மட்டுமல்லாமல் கேன்சர்பற்றி பேசினாலும் அச்சம் தரக்கூடியதாகிவிட்டது. ஆனால் நிஜவாழ்வில் சினிமா பிரபலங்கள் கேன்சரை எதிர்த்து போராடும் துணிச்சலை அதில் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு அளித்து புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றனர்.

இதில் கமல்ஹாசன் முக்கிய பங்கு வகிக்கிறார். நோயால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு அணைத்து ஆறுதல் சொல்வதுடன் அந்நோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை கவுதமிக்கும் ஆதரவு கரம் கொடுத்து தன்னுடனே அவரை இணைத்துக்கொண்டு வாழ வைத்து வருகிறார்.

 நோயிலிருந்து மீண்டிருக்கும் கவுதமி கூறும்போது, படங்களில் நான் ஏற்று நடித்த சக்திவாய்ந்த வேடங்கள்தான் போராடும் மனப்பான்மையை எனக்குள் உண்டாக்கி தந்தது. அதுபோன்ற கதாபாத்திரங்கள் எல்லாமே எனக்கு மிகவும் பிடிக்கும்.

கேன்சரால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கமலும் அவரது குடும்பத்தினரும் எனக்கு தந்திருக்கும் ஆதரவு எதையும் எதிர்கொள்ளும் வலியை தந்துள்ளது என்றார். மம்தா மோகன்தாஸ் கூறும்போது, கேன்சர் நோயால் பாதித்தவர்கள் சந்தோஷமாக வாழ பழக வேண்டும்.

 கடந்தமுறை கீமோதெரபி சிகிச்சையை நான் பெற்றபோது ஒரு வெற்றி வீராங்கனையாக என்னை உணர்ந்தேன். கேன்சர் பாதிப்பில் வாழும் அனைவரும் அதிலிருந்து மீள என்னுடைய வாழ்த்துக்கள். எனக்கு ஆதரவாக இருக்கும் அனைவருக்கும் நன்றி என்றார்.

0 comments:

Post a Comment