நமது பெர்சனல் கம்ப்யுட்டருக்குள்ளோ அல்லது லேப்டாப்புக்குள்ளோ மால்வேர் புரோகிராம்கள் நுழைந்து நம் பெர்சனல் தகவல்களை திருடி அனுப்புவது ஒரு வகை திருட்டு.ஆனால் சர்ச் இன்ஜிங்களில் நாம் தகவல்களை தேடுகையில் பல இஞ்சின்கள் நம்முடைய பெர்சனல் தகவல்களை திருடும் வாய்ப்பு உள்ளது.
இந்தக் கோணத்தில் பிரச்சினையை அணுகுகையில் ஏன் இது நடக்க கூடாது என்ற சந்தேகம் நமக்கு எழும்புகிறது.அதே நேரத்தில் சர்ச் இஞ்சின்கள் நம் கம்ப்யுட்டரில் உள்ள பெர்சனல் தகவல்களை நிச்சயம் திருடாது என்ற நம்பிக்கையும் கிடைக்கிறது.
ஒவ்வொரு முறை நீங்கள் சர்ச் இன்ஜினைப் பயன்படுத்துகையில் (யாஹூ,கூகுள் போன்றவை) நீங்கள் தேடுதலுக்கு பயன்படுத்தும் அனைத்து சொற்களையும் அவை டேட்டாவாக ஸ்டோர் செய்கின்றன. அதோடு நாம் செல்லும் அனைத்து தளங்களையும் தகவல்களாக பதிவு செய்து கொள்கின்றன.
நாம் எந்த நாளில் எந்த நேரத்தில் இவற்றை தேடுகிறோம் ன்ற தகவல்களையும் எடுத்து கொள்கின்றன.ஏன் ,நம் ஐ.பி. முகவரியை கூட இவை பதிந்து வைத்து கொள்கின்றன. இவைதான் கூகுளில் தவிர்க்க வேண்டியவை...! இவற்றிலிருந்து இந்த சர்ச் இஞ்சின்கள் நாம் எத்தகைய மனப்பாங்கு உள்ளவர்கள் ,இணையத்தை எதற்கெல்லாம் பயன்படுத்துகிறோம்.
நம் விருப்பங்கள் ,வெறுப்புகள் ஆகியவற்றை கணக்கிட்டு கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.இது நம் பெர்சனல் வாழ்க்கையில் ஒருவர் தலையிடுவதை போல தான். ஆனால் வேறு வழியில்லையே என்று நாம் அலுத்து கொள்ள வேண்டியுள்ளது.
இருப்பினும் இதிலிருந்து தப்பிக்கும் வலிகள் சிலவற்றை இங்கு காண்போம்.
சர்ச் இன்ஜினில் நுழைந்தாலும் அதில் லாக் இன் செய்திட வேண்டாம்.அவ்வாறு உங்கள் அடையாளத்தை கொண்டு உள்ளே நுழைந்தாள் உடனே உங்களைப் பற்றிய குறிப்புகள் அங்கெ செல்கின்றன.
இதனை எப்படி தவிர்க்கலாம்?
எடுத்துகாட்டாக நீங்கள் கூகுள் சர்ச் இன்ஜினை வேறு எந்த தொடர்பும் இன்றிப் பயன்படுத்தினால் நம்மைப் பற்றிய தகவல்கள் எதுவும் செல்லாது.ஆனால் அதன் கூகுள் டாக் ,ஜிமெயில் ,கூகுள் குரூப் ப்ன்றவற்றைப் பயன்படுத்தினால் நம்மைப் பற்றிய தகவல்களை நாம் அதனிடம் கொடுத்துதான் ஆக வேண்டும்.
எனவே சர்ச் இன்ஜினில் தேடும் முன் இத்தகைய வசதி தரும் அனைத்து புரோகிரம்களிலிருந்து லாக் அவுட் செய்து விடுபட்டு வெளியே வரவும்.இதனை அணைத்து சர்ச் இன்ஜிங்களிலும் மேற்கொள்ள வேண்டும்.
கூகிளை விட்டுய் வலகி செல்லுங்கள் நம்மில் பலர் கூகுள் சர்ச் இன்ஜினைதான் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம்.
ஆனால் இதில் ஆபத்து உள்ளது என்று பலருக்கு தேரியாது. கூகுள் சற்று வித்தியாசமாகத்தான் தன் அனைத்து செயல்பாடுகளையும் கொண்டுள்ளது.
நம் தேடுதல் வேலையின் போது குக்கிகளைப் பயன்படுத்தி நம்மை அறிந்து கொள்கிறது. குக்கிகளை அளித்து விட்டால் இந்த பிரச்னை சரியாகிவிடும் என்று எண்ணுகிறோம்.
அனைத்து குக்கிகளையும் அழிப்பது நமக்கு சில வசதிகள் கிடைக்காமல் செய்துவிடும்.எனவே கூகுள் ஏற்படுத்தும் குக்கிகளை மட்டும் நீக்கி விடலாம் அல்லது தடுத்து விடலாம்.
0 comments:
Post a Comment