Monday, 10 February 2014

Leave a Comment

கஹானி, அனாமிகா,தமிழில் என்ன...?



நயன்தாரா நடிக்கும் பட தலைப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியில் வித்யாபாலன் நடித்து மெகா ஹிட்டான படம் கஹானி. இதன் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா நடிக்கிறார்.

 அவருடன் பசுபதி, வைபவ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சேகர் கமுல்லா இயக்குகிறார். இந்த படத்துக்கு தெலுங்கில் அனாமிகா என பெயரிட்டுள்ளனர். இந்த தலைப்பு தமிழுக்கு ஏற்றவகையில் இருக்காது என்பதால் அவள் என தலைப்பு வைத்தனர். ஆனால் இந்த தலைப்பை ஏற்கனவே ஒரு நிறுவனம் பதிவு செய்திருக்கிறதாம்.

இதனால் அவள் தலைப்பு கிடைப்பதில் சிக்கல் உண்டானது. இதையடுத்து என் அன்பே நீ எங்கே என்ற தலைப்பை தற்காலிகமாக படத்துக்கு வைத்துள்ளனர். ஆனால் இந்த தலைப்பில் இயக்குனர் சேகர் கமுல்லாவுக்கு உடன்பாடில்லையாம்.

கதைப்படி மாயமான தனது கணவரை தேடி வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வருகிறார் நயன்தாரா. அதனாலேயே என் அன்பே நீ எங்கே என்ற தலைப்பை தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளது.

ஆனால் இந்த தலைப்பு காதல் கதை கொண்ட படத்துக்குதான் பொருந்தும். நமது படம், த¢ரில்லர் என்பதால் இது பொருத்தமாக இருக்காது என சேகர் கூறுகிறாராம். மேலும் இந்த தலைப்பை பார்ப்பவர்கள், பத்தில் ஒன்றான காதல் கதை படம¢தானே இதுவும் என முடிவு செய்துவிடுவார்கள் என சேகர் யோசிக்கிறாராம். இதனால் இந்த தலைப்பும் மாறும் என தெரிகிறது

0 comments:

Post a Comment